தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டார் ஆக என்றென்றும் ஜொலித்துக் கொண்டு இருப்பவர் தல அஜித். உலகம் முழுவதும் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த விசுவாசம், நேர்கொண்டபார்வை ஆகிய இரண்டு படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று தந்தது. இந்த படத்தைத் தொடர்ந்து தற்போது தல அஜித் அவர்கள் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தல அவர்கள் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும், இந்த படத்தின் படப்பிடிப்புகள் இந்தியாவில் நிறைவடைந்த நிலையில் வெளிநாட்டில் சில காட்சிகள் படமாக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால், கொரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்து இருப்பதால் படப்பிடிப்புக்கு வெளிநாட்டுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் வலிமை படத்தின் சில சண்டைக் காட்சிகள் ரஷ்யாவில் எடுக்கப்பட்டது.
இதையும் பாருங்க : திருமண வீடியோ முன் நடந்த மகனின் பெயர் சூட்டு விழா – மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மகன் பெயர் இதான்.
தல அஜித் அவர்கள் தன்னுடைய காட்சிகளை முடித்துக் கொடுத்தவுடன் ரஷ்யாவில் பைக்கில் பயணம் செய்தார். இந்த நிலையில் ரஷ்யாவின் காலம்னா நகரில் உள்ளூர் டாக்ஸி ஓட்டுனராக இருப்பவர் அலெக்ஸ். தினமும் இவர் படக்குழுவினர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலில் இருந்து படப்பிடிப்பு தளத்துக்கு தன்னுடைய காரில் ஏற்றி செல்வது வழக்கம். அப்படி அழைத்து செல்லும் போது அஜித்தின் அன்பான குணத்தால் டாக்சி ஓட்டுனர் ஈர்க்கப்பட்டார்.
இந்நிலையில் டாக்சி ஓட்டுநர் அலெக்ஸ் தல அஜித்துக்கு அனுப்பளிப்பு வழங்கியுள்ளார். அதில் ‘அஜித் காலம்னா நகரம் உங்களை நேசிக்கிறது என்று அச்சிடப்பட்ட இரண்டு டீ-ஷர்ட்களை அஜித்துக்கு அன்பாக வழங்கியுள்ளார். தற்போது ரஸ்யா கார் ஓட்டுனர் வழங்கிய டீசர்ட் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.