யூ டியூப் சேனல் மீது மான நஷ்ட வழக்கு-விஜய் ஆண்டனியின் அதிரடி அறிக்கை

0
695
- Advertisement -

யூ டியூப் சேனல் மீது இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மான நஷ்ட வழக்கு தொடர்ந்து இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக இருந்து நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் முதலில் தமிழ் சினிமாவில் சுக்ரன் படத்தின் மூலம் தான் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

-விளம்பரம்-

இதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். பின் 2012-ஆம் ஆண்டு வெளி வந்த நான் படத்தின் மூலம் ஹீரோவாக தான் விஜய் ஆண்டனி திரை பயணத்தை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து இவர் சலீம், இந்தியா பாகிஸ்தான், சைத்தான், எமன், அண்ணாதுரை, காளி, திமிரு புடிச்சவன் என பல படங்களில் நடித்து இருக்கிறார். பெரும்பாலும் இவர் நடித்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

- Advertisement -

விஜய் ஆண்டனி திரைப்பயணம்:

தற்போது இவர் இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் பிச்சைக்காரன் 2. இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு விஜய் ஆண்டனி மற்றும் அவரது மனைவியும் பிச்சைக்காரர்களுக்கு தங்களால் முடிந்த உதவி செய்து இருக்கிறார்கள். மேலும், இந்த படம் பார்த்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பாராட்டி இருந்தார்கள்.

கொலை படம்:

இதனை அடுத்து தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த படம் கொலை. இந்த படத்தை பாலாஜி கே குமார் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை Infiniti Film மற்றும் Lotus Pictures இணைந்து தயாரித்திருக்கிறது. திரில்லர் பாணியில் இந்த படத்தை இயக்குனர் உருவாக்கி இருக்கிறார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

விஜய் ஆண்டனி அறிக்கை:

இதனை அடுத்து விஜய் ஆண்டனி நடிப்பில் பல படங்கள் உருவாகி வருகிறது. இந்த நிலையில் யூடியூப் சேனல் மீது மான நஷ்ட வழக்கு தொடர் இருப்பதாக விஜய் ஆண்டனி அவர்கள் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், என் மீது அன்பு கொண்ட, என் அன்பு மக்களுக்கு வணக்கம். நான் இப்போது சிறு மன வேதனையுடன், இந்த கடிதம் மூலம் சில சர்ச்சைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறேன்.

யூ டியூப் சேனல் மீது வழக்கு:

ஒரு சகோதரி, யூ டியூப் சேனல் ஒன்றில் என்னையும் சகோதரர் ஏ.ஆர். ரகுமானையும் தொடர்பு படுத்தி பொய்யான வசந்தி ஒன்றை பரப்பி இருக்கிறார். அது முற்றிலும் பொய்யே! அந்த யூ டியூப் சேனல் மீது நான் மான நஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன். மான நஷ்ட வழக்கில் வரும் தொகை அனைத்தையும், நலிவடைந்த இசைத்துறை நண்பர்களுக்கு முழுமையாக கொடுக்க முடிவு செய்துள்ளேன் என்று கூறி இருக்கிறார்.

Advertisement