ஹோலி பண்டிகை கொண்டாடிய சில மணி நேரத்திலேயே அநியாயமாக பலியான 26 வயது சீரியல் நடிகை.

0
288
- Advertisement -

ஹோலி பண்டிகை கொண்டாடிய சில மணி நேரத்திலேயே பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவர் கார் விபத்தில் பலியான சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா முழுவதும் கடந்த 18ஆம் தேதி ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் சாதாரண மக்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை என பலரும் ஹோலி பண்டிகையை கொண்டாடி இருந்தனர். அதுமட்டுமில்லாமல் ஹோலி பண்டிகை கொண்டாடும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த நிலையில் ஹோலி பண்டிகையை கொண்டாடி முடிந்த பிறகு பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவர் கார் விபத்தில் இறந்த சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை காயத்ரி. இவர் தொலைக்காட்சி தொடர்களில் மட்டுமில்லாமல் வெப் தொடர்களிலும் நடித்து வந்தார். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

- Advertisement -

ஹோலி பண்டிகை கொண்டாடிய நடிகை:

மேலும், இவர் கடந்த 18 ஆம் தேதி வெள்ளி கிழமை அன்று ஹைதராபாத்தில் தனது ஆண் நண்பருடன் ஹோலி பண்டிகையை கொண்டாடி இருக்கிறார். அப்போது இவர் தன் நண்பர் உடன் சேர்ந்து ஆட்டம் பாட்டம் என்று கொண்டாடி இருக்கிறார். பின் பண்டிகை முடித்துவிட்டு காயத்ரி வீட்டிற்கு திரும்பினார். அப்போது அவருடைய நண்பர் ரோஹித் என்பவர் தான் கார் ஓட்டி வந்தார். ஆனால், இருவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

கார் விபத்தில் இறந்த நடிகை:

மேலும், இவர்கள் இருவரும் நள்ளிரவில் சென்று உள்ளார்கள். அப்போது திடீரென கார் ரோஹித்தின் கட்டுப்பாட்டை மீறி அங்கு இருந்த மகேஸ்வரி என்ற பெண்ணின் மீது மோதி இருக்கிறது. இந்த விபத்தில் மகேஸ்வரி என்ற பெண் சம்பவ இடத்தில் இறந்து உள்ளார். அதேபோல் காரில் இருந்த நடிகை காயத்ரியும் சம்பவ இடத்திலேயே பலியானதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த விபத்தில் இறந்த மகேஸ்வரி என்பவர் அருகில் உள்ள ஓட்டலில் தோட்ட வேலை செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பெண்ணிற்கு 38 வயது ஆகிறது.

-விளம்பரம்-

அநியாயமாக பலியான மூன்று பேர்:

மேலும், படுகாயங்களுடன் காயத்ரியின் ஆண் நண்பர் ரோஹித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருந்தாலும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனை அடுத்து மூன்று பேரை பலிகொண்ட இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருக்கின்றனர். தற்போது இந்த தகவல் வெளியானதை அடுத்து ரசிகர்கள் பலரும் இரங்கலை தெரிவித்திருந்தனர்.

இரங்கலை தெரிவிக்கும் பிரபலங்கள்:

அதுமட்டுமில்லாமல் தெலுங்கு சின்னத்திரையின் முன்னணி நடிகையான காயத்ரியின் இழப்பு திரையுலக பிரபலங்களுக்கு அதிர்ச்சி கொடுத்து உள்ளது. மேலும், பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தற்போது காயத்திற்கு 26 வயது தான் ஆகிறது. நடிகை காயத்ரியின் மறைவுக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement