இருவர் படத்தில் நடிப்பதற்காக போட்டோ ஷூட் வரை சென்று தவறவிட்ட மெகா ஸ்டார். வைரலாகும் புகைப்படம் இதோ.

0
59285
iruvar
- Advertisement -

சினிமா உலகில் பல முன்னணி பிரபலங்கள் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் ஏதோ ஒரு சூழ்நிலை காரணமாக அவர்களால் நடிக்க முடியாமல் வேறு நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இது காலங்காலமாக நிகழ்ந்து வரும் வழக்கம் தான். அந்த வகையில் 1997 ஆம் ஆண்டு வெளி வந்த இருவர் திரைப் படத்தில் முதலில் பிரகாஷ்ராஜ் கதாபாத்திரத்தில் நடிகர் மம்முட்டி அவர்கள் தான் நடிப்பதாக இருந்தது. தற்போது இருவர் படத்தின் போட்டோஷுட்டில் எடுக்கப்பட்ட மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளி வந்த தமிழ்த் திரைப்படம் “இருவர்”.

-விளம்பரம்-

இந்த படத்தில் மோகன்லால், பிரகாஷ் ராஜ், நாசர், தபு, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தை எழுதி,இயக்கி, தயாரித்ததும் மணிரத்னம் தான். இந்த படத்திற்கு இசையமைத்தவர் ஏ ஆர் ரகுமான். மேலும், இந்த படம் முழுக்க முழுக்க அரசியல் பின்னணியை மையமாக கொண்ட கதை ஆகும். சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற கனவுகளோடு வாழ்பவர் மோகன்லால். இவருடைய கனவை நிறைவேற்றும் வகையில் இவருடைய நண்பர் பிரகாஷ்ராஜ் திகழ்கின்றனர். பிரகாஷ்ராஜ் அவர்கள் எழுத்தாளர். இருவரும் சேர்ந்து சமுதாயத்தில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என தங்களுக்கு தெரிந்த வகையில் மக்களின் மனங்களை வருகின்றனர். எழுத்தாளராக இருக்கும் பிரகாஷ்ராஜ் அரசியலில் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறார்.

இதையும் பாருங்க : வழக்கமாக அட்லீ தான் காபி அடிப்பாரு. இது என்ன அட்லீ படத்துல இருந்து தல பட டைட்டிலை காபி அடிச்சிருகாங்க.

- Advertisement -

சினிமா துறையில் நடிகராக இருக்கும் மோகன்லாலையும் அரசியலில் சேர்த்துக் கொள்கிறார் பிரகாஷ்ராஜ். இவர்கள் இருவருடைய கட்சித் தலைவர் நாசர். சில மாதத்திற்கு பிறகு நாசர் இறந்து விடுகிறார். பின் நாசர் இருந்த பதவிக்கு யார் வரப்போகிறார்கள்? என்று பல கேள்விகள் எழுகிறது. பின் நல்ல நண்பர்களாக இருந்த மோகன்லாலும், பிரகாஷ்ராஜும் அரசியல் பதவியின் வெறியின் காரணமாக ஒருவரை ஒருவர் மோதிக் கொள்கிறார்கள். ஒன்றாக இருந்த கூட்டு ஆட்சி தனித் தனியாக புதிய காட்சிகளாக பிரிகின்றன. பின் இவர்கள் இருவரும் சேர்ந்தார்களா? இவர்களுக்கு அரசியலில் சூழ்ச்சி புரிந்ததா? என்பது தான் படத்தின் சுவாரசியம். இந்த படம் வெளிவந்த போது மக்கள் மத்தியில் அந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

ஆனால், சில ஆண்டுகளில் இந்த படம் குறித்து சோசியல் மீடியாவிலும், மக்களிடையேயும் பெரிய தாக்கம் ஏற்பட்டது. இந்த படம் குறித்து பரவலாக பேசப்பட்டது. இந்த படத்திற்காக தேசிய விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் நடித்த கதாபாத்திரத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி அவர்கள் தான் முதலில் நடிப்பதாக இருந்தது. அதற்கான போட்டோ ஷூட்டும் நடந்தது. பின் நடிகர் மம்முட்டிக்கும்,படகுழுவினருக்கும் என்ன பிரச்சனை? என்று தெரியவில்லை திடீரென்று மம்மூட்டி படத்திலிருந்து விலகி விட்டார். பின்னர் தான் இந்த படத்தில் மம்முட்டி நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் ஒப்பந்தம் ஆனார். தற்போது இந்த இருவர் படத்தின் போது எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement