தமிழ் சினிமாவில் பட்ட கஷ்டம் – புலம்பி தள்ளிய வித்யா பிரதீப்.

0
3125
vidhya
- Advertisement -

சின்னத்திரையில் இருந்து தமிழ் சினிமாவிற்கு சந்தானம், சிவகார்த்திகேயன் தொடங்கி பிரியா பவானி ஷங்கர், வாணி போஜன் என பல நடிகர் நடிகைகள் வந்து உள்ளனர். அதே போல ஆரம்பத்தில் சினிமாவில் நடித்து வந்த பல நடிகர் நடிகைகள் பின்னர் வாய்ப்புகள் குறைய சீரியல் பக்கம் வந்தனர். அந்த வகையில் மருத்துவத்துறையில் ஒரு நல்ல அங்கீகாரத்தை பெற்று சினிமா மீது இருந்த ஆர்வம் காரணமாக நடிக்க வந்தவர் வித்யா பிரதீப். ஆரம்பத்தில் இவர் செய்தித்தாள் மற்றும் பத்திரிக்கைகளில் விளம்பர மாடலாக நடித்து வந்தார். பிறகு தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘சைவம்’ படத்தின் மூலம் வித்யா நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் பசங்க2, ஒண்ணுமே புரியல, அச்சமின்றி போன்ற பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் வித்யா.

-விளம்பரம்-

தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நாயகி சீரியலில் நடித்து வருகிறார். மேலும், கடந்த ஆண்டு மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த தடம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் வித்யா அவர்கள் மலர்விழி என்ற போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் வித்யா மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார். இந்த நிலையில் வித்யா அவர்கள் தடம் படத்தில் முதல் நாள் ஷூட்டிங்கில் ஏற்பட்ட அனுபவங்களைக் குறித்து சமீபத்தில் பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

அதில் அவர் கூறியிருப்பது, சினிமா துறையில் கதாநாயகியாக நீண்ட காலம் நிலைத்து நிற்க பல போராட்டங்களையும் பல பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டி இருக்கிறது. என்னுடைய வாழ்விலும் இந்த மாதிரி நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளது. எல்லாம் எதிர் கொண்டு தான் இருக்கிறேன். பின் பல போராட்டங்களுக்குப் பிறகு தடம் படத்தின் மூலம் எனக்கு தமிழ் சினிமா உலகில் அங்கீகாரம் கிடைத்தது. பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி அவர்கள் என்னுடைய கண்களை பார்த்து பாராட்டி இருந்தார்.

நான் முதல் நாள் ஷூட்டிங்கில் போலீஸ் உடையில் போய் நிற்கும் போது எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. ஆனால், மகிழ் திருமேனி அவர்கள் ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருந்தார். எனக்கு நிறைய ஆதரவாக இருந்து உள்ளார். மகிழ் திருமேனி சாருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்! என்று கூறி உள்ளார்.

-விளம்பரம்-

Advertisement