இவர் படத்தை வன்னியர் மக்கள் புறக்கணிக்க வேண்டும் – தலைவர் 170 படத்திற்க்கு வன்னியர் சங்கம் எதிர்ப்பு.

0
2173
- Advertisement -

ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று வன்னியர் சங்கம் அறிவித்திருக்கும் அறிக்கை தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் டி ஜே ஞானவேலும் ஒருவர். இவர் முதலில் எழுத்தாளராக தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார். பின் 2010 ஆம் ஆண்டு வெளியான ரத்தசரித்திரம் என்ற படத்தில் இவர் எழுத்தாளராக இருந்தார்.

-விளம்பரம்-

அதனைத் தொடர்ந்து இவர் பயணம், தோனி போன்ற சில படங்களுக்கு எழுத்தாளராக பணிபுரிந்தார். அதனை அடுத்து 2017 ஆம் ஆண்டு வெளிவந்த கூட்டத்தில் ஒருத்தன் என்ற படத்தின் மூலம் இவர் இயக்குனராக அறிமுகம் ஆகியிருந்தார். இதனை அடுத்து இவர் 2021 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியாகியிருந்த ஜெய்பீம் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி இருந்தது.

- Advertisement -

ஜெய்பீம் படம்:

பழங்குடியின மக்களின் வாழ்க்கை குறித்தும், உண்மையாலுமே பழங்குடியின மக்களுக்கு நடந்த அநீதியை குறித்தும் சொல்லும் கதையாக ஜெய்பீம் அமைந்து இருந்தது. இந்தப்படம் மக்களின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே போல இந்த படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தியதாக பல வன்னிய சமூகத்தினர் குற்றம் சாட்டினார்கள். குறிப்பாக இந்த படத்தில் வில்லனாக வந்த ‘குருமூர்த்தி’ என்ற கதாபாத்திரத்தின் வீட்டில் இருக்கும் காலண்டரில் அக்னி கலசம் காட்டப்பட்டது.

வன்னியர் சமூகத்தினர் குறித்த சர்ச்சை:

இது பல வன்னியர் சமூகத்தினரை காயப்படுத்தவாக குற்றச்சாட்டுங்கள் எழுந்தது. இதனால் படத்தில் அந்த அக்னி கலசம் நீக்கப்பட்டது. இருப்பினும் இந்த படத்திற்கு வன்னியர் சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்து இருந்தார்கள். ஆனால், இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்கு பல விருதுகளை வாங்கி இருந்தது. இதனை அடுத்து தற்போது ரஜினியின் 170வது படத்தை இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்க இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

தலைவர் 170 படம்:

இந்த படத்தின் பூஜை சென்னை லீலா பேலஸில் நடைபெற்று இருந்தது. இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. அதனால் தலைவர் 170 என்று அழைக்கப்படுகிறது. தலைவர் 170 படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இஸ்லாமிய போலிஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வன்னியர் சங்க மாநில செயலாளர் அறிவித்திருக்கும் அறிக்கை தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

வன்னியர் சங்க மாநில செயலாளர் அறிக்கை:

அதாவது, ஜெய் பீம் படத்தின் போது இயக்குனர் ஞானவேல் அவர்கள் வன்னியர் சமூகத்தை தவறாக சித்தரித்தும் இழிவாக காட்டியது மட்டுமில்லாமல் மறைந்த வன்னியர் சங்க தலைவர் மாவீரன் அவர்களையும் எதிர்மறையான கதாபாத்திரமாக வடிவமைத்து காண்பித்து இருந்தார். ஒட்டுமொத்த வன்னியர் சமூகம் இதர சகோதர சகோதிரிகளும் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால், இதுவரை தான் செய்த தவறுக்கு நேரடியாக ஞானவேல் மன்னிப்பு கேட்கவில்லை. இத்தகை குணம் கொண்டவர் இயக்கும் எந்த படங்களையும் வன்னியர் சமூக மக்கள் ஆதரிக்காமல் ஒற்றுமையாக புறக்கணிக்க வேண்டும். அதன் மூலம் தான் நம்முடைய எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Advertisement