ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘தளபதி 63 ‘ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தனது 63 வது படத்தில் நடித்து வருகிறார். தெறி, மெர்சல் போன்ற படங்களை தொடர்ந்துதற்போது அட்லீயுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் விஜய்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், யோகி பாபு, கதிர், விவேக் ஆனந்த் ராஜ் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடிக்கின்றனர். மேலும், இந்த படத்தில் இந்தி நடிகர் ஷாருக்கான் நடிப்பதாகவும் தகவல் வெளியானது.
இதையும் பாருங்க : பிறந்தநாளை 500 மிருகங்களுடன் கொண்டாடிய காஜல் அகர்வால்.! வைரலாகும் வீடியோ.!
இந்த படத்திற்கு ‘சி எம்’, ‘கேப்டன் மைக்கேல் ‘, ‘பிகில்’ என்று தலைப்பு வைத்துள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகின. மேலும், இந்த படத்தின் டைட்டில் இந்த உலகையும் தாண்டி இருக்கும் அந்த பெயரை நீங்கள் அகராதியில் கூட தேட முடியாது என்று இந்த படத்தின் முக்கிய பிரபலர் ஒருவர் ட்வீட் செய்திருந்தார்.
அதே போல இன்று காலையும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது . இந்த நிலையில் ரசிகர்கள் யூகித்தது போலவே படத்திற்கு ‘பிகில்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். மேலும், அப்பா, மகன் கெட்டப்பில் விஜய் படு ஸ்டைலாகவும், கெத்தாகவும் இருக்கிறார்.
இன்று(ஜூன் 21) மாலை 6 மணிக்கு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான ‘தளபதி பிறந்தநாளை முன்னிட்டு இன்று இரவு இரவு 12 மணிக்கு செகண்ட் லுக்கும் வெளியாவதாக படக்குழுவினர் கடந்த புதன் கிழமை அறிவித்திருந்தனர். இதனால் இரண்டாவது போஸ்டரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.