அன்று விஜய்யின் நண்பர் இன்று விஜய்யின் சகோதரர் – தளபதி 66 படத்தில் நடிப்பதை உறுதி செய்த 90ஸ் நடிகர்.

0
300
Shyam
- Advertisement -

22 ஆண்டுகளுக்குப் பிறகு தளபதி 66 படத்தில் விஜய்யுடன் இணையும் பிரபலம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். தற்போது விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ்,யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். மேலும், பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-497-1024x569.jpg

பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. அதுமட்டும் இல்லாமல் விஜய் இந்த படத்துக்கு எப்படி ஓகே சொன்னார்? என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இப்படி எக்கச்சக்கமான நெகட்டிவான விமர்சனங்கள் பீஸ்ட் பெற்று இருந்தாலும் வசூலில் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் ‘தளபதி 66’ என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார்.

- Advertisement -

‘தளபதி 66’ படம் பற்றிய தகவல்:

மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜூ இருவரும் இணைந்து பல படங்களில் பணிபுரிந்து இருக்கிறார்கள். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது.இந்த படத்தில் விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகின. படத்தின் முக்கியமான காட்சிகள் சென்னையிலும், ஒரு சில காட்சிகள் மற்றும் மற்ற இடங்களிலும் படமாக்கப்பட உள்ளது.

This image has an empty alt attribute; its file name is 1-496-1024x576.jpg

விஜய்யின் அண்ணனாக நடிக்கும் நடிகர்:

தற்போது தளபதி 66 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் அடுத்த கட்ட படபிடிப்புக்கு படக்குழு தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடிப்பதற்கு 80 கால கட்டத்தின் முக்கிய நாயகனாக இருந்த நடிகர் மோகனிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால், ஹீரோக்களுக்கு அப்பா, அண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் இல்லை என்றும் நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்றும் மோகன் கூறி விட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் விஜய்யின் அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

தளபதி 66 படத்தில் ஷ்யாம்:

அவர் வேற யாரும் இல்லைங்க, சாக்லேட் பாய் நடிகர் ஷாம் தான். தளபதி 66 படத்தின் கதை மற்றும் கதாபாத்திரம் குறித்து கேட்ட உடனே அவர் ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. படத்தில் இரு அண்ணன் ரோலில் ஒருவராக ஷ்யாம் நடிக்கிறார். மற்றொருவர் கதாபாத்திரத்திற்கு பிரபல நடிகரிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கின்றது. மேலும், 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான குஷி படத்தில் விஜய்க்கு நண்பராக நடித்திருந்தார் ஷியாம் நடித்து இருந்தார். நடிகர் ஷாம் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகம் ஆவதற்கு முன்பே குஷி படத்தில் நடித்திருக்கிறார். தற்போது இவர் விஜய் உடன் மீண்டும் அண்ணனாக நடிக்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.

உறுதி செய்த ஷியாம் :

தற்போது இதை உறுதி செய்யும் வகையில் நடிகர் ஷியாம் தனது சமூக வலைதள பக்கத்தில் தளபதி66 படத்தில் கமிட் ஆனது குறித்து பதிவு ஒன்றை போட்டு ” தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் ஷியாம். 2001 ஆம் ஆண்டு வெளிவந்த 12b என்ற திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். முதல் படத்திலேயே இவர் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதன் பின்னர் இவர் 20க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இடையில் இவர் தமிழ் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டாலும் தற்போது இவர் படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

Advertisement