சினிமாவைப்பொறுத்தவரை நடிகைகள் திருமணம் செய்து கொண்ட பின்னர் சினிமாவிற்கு முழுக்கு போட்டு விடுவது ஒன்றும் புதிதான ஒரு விஷயம் அல்ல. அதிலும் குழந்தை பிறந்து விட்டால் சொல்லவே வேண்டாம். அந்த வகையில் திருமணத்திற்கு பின்னர் தமிழ் சினிமாவில் இருந்து சீரியலுக்கு வந்த நடிகை பானுவும் ஒருவர். மலையாள திரையுலகில் 2005-ஆம் ஆண்டு வெளி வந்த ‘ஒட்ட நாணயம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் ‘அச்சன் உறங்காத வீடு’ என்ற படத்தில் நடித்தார் நடிகை முக்தா. தமிழில் 2007-ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான ‘தாமிரபரணி’ படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். இதை தொடர்ந்து தமிழில் ‘ரசிகர் மன்றம், அழகர் மலை, சட்டப்படி குற்றம், மூன்று பேர் மூன்று காதல், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, வாய்மை, பாம்பு சட்டை’ என அடுத்தடுத்து சில படங்களில் நடித்தார் முக்தா.
இதையும் பாருங்க : ஈழப் பெண் சர்ச்சையில் இருந்து வெளிவந்த தன் மருமகன் குறித்து மனம் திறந்த ஆர்யாவின் மாமியார்.
மேலும், மலையாளம் மற்றும் தமிழ் சேனல்களில் ஒளிபரப்பான சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார் முக்தா. 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30-ஆம் தேதி நடிகை முக்தா, ரிங்கு டாமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கியாரா என்ற மகள் உள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக பானு எந்த படத்திலும் நடிக்கவில்லை.
இப்படி ஒரு நிலையில் இவரது மகளை சினிமா உலகிற்கு அறிமுகம் செய்ய உள்ளார். மலையாள இயக்குனர் பத்மகுமார் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் பத்தாம் வளவு என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பானுவின் மகள் கியாரா நடிக்க இருக்கிறார் இந்த தகவலை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருக்கிறார்.