எல்லாரிடமும் வன்மத்தை வளர்த்து கொண்டே போக கூடாது – மாரிசெல்வராஜ் முன்பே பேசிய தங்கர் பச்சான்

0
1894
Thangarbacchan
- Advertisement -

தமிழ்குடிமகன் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் தங்கர்பச்சான் நாங்குநேரி சம்பவத்தை பற்றி பேசியிருந்தார். அதில் “ நாம் நிறையவற்றை பற்றி பேசுகிறோம் சாதிய அடக்குமுறை, சாதிய வன்முறை, சாதிய விடுதலை இதை பற்றி எல்லாம் பேசி வருகிறோம் ஆனால் செயல்படுத்துவது எங்கே ? இதுவெல்லாம் நடைபெறாமல் இருக்கும் காரணம் தடை யார் யார் ?இதற்க்கு மக்களும் ஒரு காரணம். நான் எனது கிராமத்தில் இருந்து சென்னை வந்த போது நான் பார்த்த சாதிய பாகுபாடு இன்றைக்கு இல்லை என்று என்னால் சொல்லமுடியும்.இது தமிழ்நாடு முழுவதும் இருக்கிறது.

-விளம்பரம்-

இது இன்னும் எதனால் உயிரோடு இருக்கிறது இதற்க்கு உயிர் கொடுக்க விரும்புபவர்கள் அதிகாரத்தை பெற விரும்புபவர்கள் அந்த அதிகாரத்தை சாதிய வெச்சி தான் பெறுகிறார்கள். சாதிய வெச்சி சட்டம் இயற்றினால் மட்டும் போதாது அதை துன்புறுத்துபவர்களுக்கு தண்டனை கொடுத்தல் மட்டும் போதாது, இங்கு சாதிய வெச்சி தான் எல்லாமே உருவாக்க படுகிறது. அனைவரிடமும் கோபத்தை கட்டுவது முக்கியமா அல்லது அனைவருடன் இணைப்பது முக்கியமா? இன்றைக்கு மாறிக்கொண்டே வருகிறது மக்கள் முன்பு போல் இல்லை.

- Advertisement -

நிறைய மாற்றங்கள் வந்தாச்சி. அது போன்ற நிகழ்வுகள் நடந்தால் கூனிக் குறுகுகிறார்கள் அதற்க்கு ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. அதை ஒருநாளும் தீர்த்து விட முடியாது. ஆனால் ஒரு திரைப்படம் செய்ய வேண்டிய வேலைய என்னவென்றால் அதை இணைகின்ற வேலை மேலும் பிரிவினையை ஏற்படுத்தும் வேலை இல்லை. அதை இப்போ எப்படி இணைப்பது அதைத்தான் நாம் இப்போது செய்ய வேண்டும். அது போன்ற படங்களும் வர வேண்டும். வெறும் வலிகளை தரக்கூடிய படங்களை தாண்டி அதை இணைக்க கூடிய படங்கள் ஒன்று கூட வரவில்லை.

இனி அடுத்த கட்டமாக அது போன்ற படங்கள் தான் வரவேண்டும். நமக்கு எல்லாம் சுதந்திர தினம் என்பது ஒரு நாள் விடுமுறை தான் நாம் அதைப்பற்றி சொல்லி தரவே இல்லை. நான் கிராமத்தில் பிறந்தவன் எனக்கு சாதிய அடுக்குகள் பற்றி பெரியதாக தெரியவில்லை அதன் பிறகு சென்னை வந்த போது ஏதும் இல்லாமல் போனது. அதன் பிறகு நாங்குநேரி நடந்தது பற்றி. என்னால் என்ன எழுதுவது என்ன கூறுவது என்று முடியாமல். இருந்து வந்தேன்.

-விளம்பரம்-

அதை 140 எழுத்தில் டிவிட்டரில் எழுத முடியுமா?. இதை நான் யாரிடம் கேட்பது யாரைப் பற்றி கேட்பது. யார் எல்லாம் அதற்கு காரணமாக இருக்கிறார்களோ யாரெல்லாமே தடுக்க வேண்டுமோ அவர்களே அதுக்கு பரிசுப் பொருட்களை அளிக்கின்றனர். இன்னும் எத்தனை பேர் சாப்பிட போறோம் இன்னும் எத்தனை பேருக்கு காசு கொடுக்கப் போகிறீர்கள்.

சாதிய பாகுபாடு, சாதிய அடக்குமுறை, சாதிய பெருமை, சாதி பிரிவினை இது எல்லாம் குறையும் வகையில் திரைப்படம் எடுக்க வேண்டும். எல்லாரிடமும் வன்மத்தை வளர்த்து கொண்டே போக கூடாது. இது சரியல்ல. நாங்குநேரியில் நடைபெற்றது அவமானம். எனக்கு எது அதிர்வாக இருக்கிறது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நானும் பள்ளிக்கூடம் என்ற திரைப்படத்தை எடுத்துள்ளேன்.இது எல்லாம் ரொம்ப வருத்தமாக இருக்கிறது.” என்று அவர் கூறினார்.                     

Advertisement