தவசி படத்திற்கு வசனம் எழுதினாரா சீமான்? அப்போ ஏன் பெயர் போடல? – இயக்குனரே அளித்த விளக்கம் இதோ.

0
245
- Advertisement -

விஜயகாந்த் இறப்பு குறித்து அளித்த பேட்டியில் சீமான் கூறிய கருத்து தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சோசியல் மீடியா முழுவதும் விஜயகாந்தின் இறப்பு குறித்த செய்தி தான் வைரலாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று இருந்தார். கடந்த மாதம் விஜயகாந்த் அவர்களுக்கு இருமல், சளி அதிகமாக இருந்ததால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

இதனால் இவரை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்திருக்கிறார்கள். பின் கடந்த 11-ம் தேதி விஜயகாந்த் வீடு திரும்பி இருக்கிறார். அவர் பூணமாக குணமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜயகாந்த் மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் காலமானார் என்று மியாட் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

- Advertisement -

கேப்டன் மறைவு:

கேப்டனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விஜயகாந்தின் இறப்பு ஒட்டு மொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டு இருக்கிறது.

பிரபலங்கள் இரங்கல்:

முதல்வர் மு க ஸ்டாலின், ரஜினிகாந்த், விஜய் என பல பிரபலங்கள் நேரில் சென்று தங்களுடைய இரங்கலை தெரிவித்து இருக்கிறார்கள். இவருடைய உடல் தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று மாலை விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த விமான மூலம் தூத்துக்குடியில் இருந்து வந்திருக்கிறார்.

-விளம்பரம்-

சீமான் பேட்டி:

பின் அவர் செய்தியாளர்களை சந்தித்து, விஜயகாந்த் என்றால் துணிவு தான். அவருடைய தவசி படத்துக்கு நான் தான் உரையாடல் எழுதினேன். அப்போது தான் அவருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது என்று கூறியிருந்தார். இதை நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் 2001 ஆம் ஆண்டு வெளியான தவசி திரைப்படத்திற்கு படத்தின் இயக்குனர் உதயசங்கர் தான் வசனம் எழுதினார் என்பதை சோசியல் மீடியாவில் பதிவிட்டு சீமானை கிண்டல் செய்து வருகிறார்கள்.

இயக்குனர் அளித்த விளக்கம் :

அதிலும் சிலர், வசனம்- சீமான் எங்குமே அந்த படத்தில் இல்லை என்றும் சுட்டிக் காட்டி வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் தவசி பட இயக்குனர் கூறியுள்ளதாவது ‘படத்தில் சீமான் வசனம் எழுதியது உண்மைதான். அந்த சமயத்தில் அவர் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருந்தார். எனவே அவரது பெயரை வைத்தேன் என்று போட்டுவிட்டால் அவருக்கு இயக்குனர் வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுமோ என்பதற்காக தான் அவரே வேண்டாம் என்று சொன்னார் ஆனால் நான் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை’ என்று கூறியுள்ளார்.

Advertisement