தலைமை காவலர் பணியை துறந்து பாஜகவில் இணைய போகும் காவலர். காரணம் என்ன தெரியுமா?

0
1350
- Advertisement -

தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாமுழுவதும் நேற்றைய தினம் 77 வது சுதந்திர தினம் பல்வேறு கலை நிகழ்சிகளுடன் சிறப்பாக கொண்டாப்பட்டு வந்தது. அதில் காவலர் ஒருவர் சுதந்திர தினம் அன்று தான் புனிதமாக செய்து வரும் இந்த காவல் பணியை 77 வது சுதந்திர தினத்தன்று ராஜினாமா செய்கிறேன் என்று கூறியிருந்தார். மேலும் அவர் பாஜகவில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

-விளம்பரம்-

தலைமை காவலராக பணியாற்றி வருபவர் கார்த்திகேயன். இவர் கேணிக்கரை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். அவர் நேற்று வெளியிட்ட வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் அவர் சுதந்திர தினத்தன்று எனது பணியை ராஜினாமா செய்கிறேன் என்றும் கூறியுள்ளார். நேற்று ராமநாதபுரம் மைதானத்தில் சுதந்திர தின விழாவானது பல கலை நிகழ்சிகளுடன் பிரமாண்டமான நடைபெற்றது.

- Advertisement -

அதில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தேசிய கோடியை ஏற்றி வைத்தார். இதனை தொடர்ந்து காவலர் கார்த்திகேயன் இவ்வாறு கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.அந்த வீடியோவில் அவர் கூறியது “ இந்தியா சுதந்திரம் பெற்று 77ஆண்டுகள் ஆகிறது, ஆனாலும் இந்த இன்றும் சமூகம் சுதந்திரம் பெறமால் தான் இருக்கிறது. இந்த தேசத்துக்காக இந்த சமூகத்துக்காகவும் நான் புனிதமாக நேசிக்கும் இந்த காவல் பணியை 77 வது சுதந்திர தினத்தன்று நான் ராஜினாமா செய்ய போகிறேன்.

என்னுடைய இந்த ராஜினாமா கடிதத்தை இன்று ( நேற்று ) போலிஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் அளிக்க போகிறேன்” என்று அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார். மேலும் இவர் ஒரு ஆடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். இந்த ஆடியோ மற்றும் விடியோவானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோ வீடியோ குறித்து கேனிக்கரையில் பணியாற்றும் காவல் நிலைய போலிசாரிடம் விசாரித்த போது அவர்கள் கூறியது “ கார்த்திகேயன் ராஜினாமா செய்யாப் போகிறார் என்ற அறிகுறியே அவரிடம் இல்லை, இன்று அனைவரிடமும் வழக்கம் போல் தான் பேசிக்கொண்டு இருந்தார்.    

-விளம்பரம்-

நாங்களும் உங்களைப் போல தான் அந்த வீடியோவை பார்த்து தான் எங்களுக்கும் தெரிந்தது” என்றும் அவர்கள் தெரிவித்தனர். கார்த்திகேயன் தந்து ராஜினாமா கடிதத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளிக்க சென்றுள்ளார்  அப்போது அவர் முதலமைச்சரின் நிகழ்சிகளை பார்வையிட சென்றுள்ளார், நீங்கள் மாலை வந்து அவரை பாருங்கள் என தெரிவிக்கப் பட்டுள்ளது. பின்னர் அவர் தனது ராஜினாமா கடித்தை சூப்பிரண்டு தங்கதுரையிடம் அளித்தார். மேலும் கூறிய அவர் இந்த காவல் துறையில் பணியாற்றி வருவதால் என்னால் சமூக கருத்துக்களை வெளிப்படையாக கூற முடியவில்லை அதனால் தான் நான் எனது பணியை ராஜினாமா செய்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். நான் பாஜகவில் இணைத்து மக்கள் பணியை செய்ய இருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.                      

Advertisement