நாங்கள் சனாதனத்தில் இருக்கும் அதை மட்டும் தான் எதிர்க்கிறோம் – அமைசர் சேகர் பாபு.

0
945
- Advertisement -

நாங்கள் சனாதனத்தை எதிர்க்க வில்லை அதில் உள்ள சில கருத்துகளை தான் எதிர்த்து வருகிறோம் என்று அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். சமீப காலமாகவே அமைச்சர் உதயநிதி பேசிய பேச்சு தான் இந்தியா முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் அது குறித்து அண்ணாமலையும் பல பாஜக தலைவர்கள் அவர்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருவதும் அதற்க்கு திமுகவினர் பதிலளித்து வருவதும். தினமும் தொடர்ந்து தான் வருகிறது. தற்போது அண்ணாமலை கூறிய கருத்திற்கு இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு அதற்க்கு பதிலளித்து உள்ளார்.

-விளம்பரம்-

அமைச்சரின் பதில்:

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இந்த ஆட்சி மீது குறை சொல்ல முடியாமல். கையில் ஏதும் கிடைக்காததால் அவர் தினமும் ஏதோ ஒரு உரையாடலை பற்றி பேசி வருகிறார். பெண்கள் உடன்கட்டை ஏறுவது கற்புக்காகத்தான் என்றும் அதற்கு புதிய விளக்கத்தை கொடுத்தார் அவர். இது போன்ற குழம்பி போய் இருக்கிறார். தமிழகத்தில் எவ்வாறு அரசியல் செய்வது எவ்வாறு கட்சியை தக்க வைத்துக் கொள்வது என்று தெரியாமல் குழம்பு போயிருக்கிறார். அவருடைய “என் மண் என் மக்கள்” பாதயாத்திரை முழுவதும் படுதோல்வி அடைந்துள்ளது.

- Advertisement -

ஏதாவது ஒரு பிரச்சினையை கையில் எடுக்க வேண்டும் என்பதற்காக உப்புச் சப்பு இல்லாத சனாதனத்தை தர்மத்தை பற்றி பேசி வருகிறார். நாங்கள் தெளிவாக கூறிவிட்டோம் சனாதனத்தை நாங்கள் எதிர்க்கவில்லை, அதில் உள்ள கோட்பாடுகளை சிலவற்றைத் தான் எதிர்க்கிறோம். இந்த ஆட்சியைப் பொருத்தவரைக்கும் இது சமத்துவமான ஆட்சி. வேலையற்றவர்களின் பொழுது போக்கிற்காக இது போன்ற பிரச்சனைகளை எங்களின் பணிகளை  திசை  திருப்புவதற்கு உதவியாக இருக்கும் என்ற வார்த்தை நினைத்து விட்டால் அதை அவர்கள் தோல்வியை தான் தழுவுவார்கள்.

எங்களுடைய இறை பணி தொடர்ந்து தமிழக மக்களுக்கு தமிழக  முதல்வரின் வழிகாட்டுதல் படி  நடைபெறும் என்று நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்த ஆட்சி வந்ததற்கு பிறகு அர்ச்சகர் பள்ளியில் படித்த 94 அர்ச்சகர்களுக்கு பணி நிறைவு ஆணை நேற்று வழங்கப்பட்டது. சாதனத்தில் உள்ள சில கோட்பாடுகளை மட்டும் தான் நாங்கள் எதிர்த்து வருகிறோம். பெண் கல்வி மறுப்பு மற்றும் கணவரை இழந்த கைம்பெண் உடன்கட்டை ஏறுதல். அது போன்ற கோட்பாடுகளை தான் நாங்கள் எதிர்க்கிறோம். மக்களிடையே உயர்ந்தவர் தாழ்ந்தவர் பாகுபாடு இருக்கக் கூடாது என்று கூறுகிறோம்.

-விளம்பரம்-

தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்று கூறி வரும் இவைகள் சனாதனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால் அந்தக் கோட்பாடுகளை தான் நாங்கள்  எதிர்க்கிறோம் தவிர சனதனத்தை ஏற்றுக் கொண்டவர்கள் அனைவரையும் நாங்கள் எதிர்க்கவில்லை. எங்களுடைய முதல்வர் எங்காவது ஒரு இடத்தில் மதத்தைப் பற்றி தரக்குறைவாக பேசி உள்ளாரா. இறை நம்பிக்கை என்பது ஒவ்வொருவருடைய நம்பிக்கை அதில் திராவிட  முன்னேற்ற கழகம் தலையிட்டது கிடையாது. ஆண்டவனை வழிபடுபவரை ஏற்றுக் கொள்வோம் ஆண்டவனை எதிர்ப்பவரும்  ஏற்றுக்கொள்வோம் இதுதான் சமத்துவம். சமத்துவத்தின் ஊர் அங்கம் தான்  திராவிட முன்னேற்ற கழகம்.

Advertisement