முதல் ப்ரோமோவிலேயே சர்ச்சையை கிளப்பிய விஜய் டிவி சீரியலை போன் செய்து பாராட்டிய அனுஷ்கா – சீரியல் நாயகி போட்ட பதிவு.

0
521
anushka
- Advertisement -

தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்துமே TRP மதிப்பீடு என்ற ஒரு விடயத்தை வைத்து தான் தங்களின் தொலைக்காட்சி தரத்தை முடிவு செய்து வருகிறது.அந்த வகையில் பல்வேறு தொலைக்காட்சிகளும் தங்களுடைய TRP தரத்தை நிலைநாட்டிக்கொள்ள பல்வேறு வித்யாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ்,கலர்ஸ் என்று பல்வேறு தொலைக்காட்சியின் அச்சாரமாக விளங்கி வருவது சீரியல்கல் மட்டும் தான். அதில் ஒரு சில தொலைக்காட்சியில் வரும் ஒரு சில நிகழ்ச்சிகள், டிவியின் TRP அளவை எகிற வைக்கிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது அந்த வகையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் துவங்கப்பட்ட சீரியல் தென்றல் வந்து என்னை தொடும்.தில் நாயகனாக ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’ சீரியல் நடிகர் வினோத் பாபுவும், நாயகியாக பவித்ராவும் நடித்து வருகின்றனர். இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருக்கிறது.

- Advertisement -

பாராட்டிய அனுஷ்கா ஷெட்டி :

இப்படி ஒரு நிலையில் இந்த தொடரை பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டி பாராட்டி இருக்கிறார். இதுகுறித்து இந்த தொடரின் நாயகி பவித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ‘, தாமதமான பதிவு, என் உற்சாகத்தை வார்த்தைகளால் மொழிபெயர்க்க எனக்கு அதிக நேரம் தேவைப்பட்டது. ஒரு நீண்ட சோர்வான நாளை ஊக்கப்படுத்தும் விதமாக ஒருவரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அது வேற யாரும் இல்லை அனுஷ்கா தான்.நமது பாகுபலி நடிகை தேவசேனா.

இது ஒரு பிராங்க் கால் என நினைத்தேன். ஆனால் உண்மையை தெரிந்து கொண்ட பிறகு மிகவும் சந்தோஷம். தென்றல் வந்து என்னை தொடும் சீரியலுக்கு இது ஒரு பாராட்டு அழைப்பு. அனுஷ்கா எங்களை பாராட்டினார்.அவர் மீதான மரியாதை எல்லைகளை கடந்தது. அவர் எங்கள் தொடரை வழக்கமாக பார்ப்பதாக குறிப்பிட்டார். மேலும் அவரிடம் பெற்ற பாராட்டுக்கள் என் இதயத்தில் என்றென்றும் பொறிக்கப்படும். நான் மேகத்தில் பறக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-

சர்ச்சையை ஏற்படுத்திய ப்ரோமோ :

இந்த சீரியல் துவங்கிய முன்னர் இந்த சீரியலின் ப்ரோமோ வெளியான போது பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது. நாயகிக்கு நாயகன் அவரது சம்மதம் இல்லாமல் தாலி கட்டிவிட்டு  ‘இப்போ நா உனக்கு தாலி கட்டிட்டேன், பொட்டும் வச்சிட்டேன், நீ என்ன எனக்கு பொண்டாட்டியா? போவியா’ என்று வசனம்இருப்பார். இதை பார்த்த பலரும் இது பெண்களுக்கு எதிரான குற்றம் எப்படி இதை ஒளிபரப்பலாம் என்று கண்டனம் தெரிவித்து வந்தனர்.

திருமணம் ஆகிவிட்டால் தாலியை கழட்ட கூடாது, இப்படித்தான் உடை உடுத்த வேண்டும் போன்ற பிற்போக்கு தனங்கள் சீரியல் மூலமாகத்தான் இன்னும் சமூகத்தை விட்டு அகலாமல் இருப்பதாகவும், இது போன்றவை தான் சமூகத்தை விஷமாக்குவதாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் இந்த ப்ரோமோ குறித்து திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஐ.பி.எஸ், தமிழகத்தில் பெண்களை துன்புறுத்துவதற்கு கொடுக்கப்படும் தண்டனைகள் குறித்த விளக்கத்தை அளித்து இருந்தார்.

ஐ.பி.எஸ் அதிகாரி அளித்த விளக்கம் :

அதில், பிரிவு 4-ன் படி, கல்வி நிலையங்கள், கோயில் மற்றும் இதர வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையம், சாலை, ரயில்வே நிலையம், சினிமா தியேட்டர், பார்க், பீச், திருவிழா நடக்கும் இடங்கள், பொதுப் போக்குவரத்து வாகனங்கள் உள்ளிட்ட இடங்களில் பெண்களை துன்புறுத்துவர்கள் மீது, அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், குறைந்தது 10,000 ரூபாய் இழப்பீடும் வசூலிக்கப்படும் என குறிப்பிட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement