தொலைக்காட்சி வாய்ப்பு இல்லை என்றாலும், 85,000 மாணவர்களுக்கு கிராமிய கலையை கற்று கொடுத்து வரும் ஆனந்த் கண்ணன்.

0
10495
Ananda-kannan
- Advertisement -

ஒருக் காலத்தில் இன்றைய தொகுப்பாளர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் ஆனந்த கண்ணன். இவர் உண்மையில் இவர் ஒரு சிங்கப்பூர் தமிழர் ஆவார். சிங்கப்பூரில் உள்ள வசந்தம் தொலைக்காட்சி என்ற டீவி சேனனில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராக இருந்தார். பின்னர் ரேடியோ சிட்டி எப்.எம் ரேடியோ ஜாக்கியாக வாய்ப்பு கிடைத்து குடும்பத்துடன் சென்னையில் வந்து செட்டில் ஆனார் ஆனந்த கண்ணன். ரேடியோ சிட்டியில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே, சன் மியூசிக் சேனலில் வீ.ஜேவாக தேர்வானார். அதன் பின்னர் சன் டிவியில் சிந்துபாத் என்ற குழந்தைகளை கவரும் நாடகத்தில் நடித்தார் ஆனந்த கண்ணன். இவர் நடித்த விக்ரமாதித்தன் தொடர் 90களில் பிறந்த குழந்தைகளின் பேவரட் நாடகம் ஆகும்.

-விளம்பரம்-
anandha kannan

- Advertisement -

மேலும், இவர் சினிமாவில் சில படங்களில் நடித்து உள்ளார். இவர் கிராமிய கலைகள் மீதான ஆர்வத்தின் காரணமாக சிங்கப்பூரில் குடியேறினார். தான் கற்ற பாரம்பரிய தமிழ் கலைகளை மேடை நாடகங்கள், தெருக்கூத்துக்கள், கதைகள் வாயிலாக பிற நாட்டு மாணவர்களுக்கு பயிற்றுவித்து வருகிறார். தற்போது துடும்பு மற்றும் பறை இசைப் பயிற்சிக்காக சென்னை வந்து இருக்கிறார். இது குறித்து அவரிடம் கேட்ட போது அவர் கூறியது, நான் முதலில் தொகுப்பாளராக வேலை செய்து கொண்டிருந்த போது நா. முத்துசாமி ஐயாவிடம் கூத்துப்பட்டறையில் பயிற்சி எடுத்தேன். அப்போதிலிருந்து எனக்கு கிராமிய கலைகளின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமிய கலைகளில் அனுபவம் பெற்ற பயிற்சியாளர்கள் இடம் பல ஆண்டுகளாகவே நான் கற்றுக் கொண்டு வந்தேன்.

சிங்கப்பூரில் இருந்து வந்து சென்னையில் நான் 10 வருடம் வாழ்ந்திருக்கிறேன். பின் 2013 ஆம் ஆண்டு மீண்டும் சிங்கப்பூருக்கு சென்று நான் கத்துக்கிட்ட கிராமிய கலைகளை “ஆனந்தக் கூத்து” என்ற பயிற்சியின் மூலம் சொல்லிக் கொடுத்தும், அருகில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக சொல்லிக் கொடுத்தும் வருகிறேன். இதுவரை 85,000 மாணவர்கள் என்னிடம் பயிற்சி எடுத்துக் கொண்டு வருகிறார்கள். நம் தமிழகத்தில் தோன்றிய கலைகளை பிற நாடுகளிலும் புகழ் பெற வேண்டும் என்ற நோக்கில் தான் நான் செய்து வருகிறேன். அது மட்டும் இல்லாமல் பிற நாடுகளுக்கு இந்த கலை நிகழ்ச்சிகள் நடக்கும். ஆனால், அந்த மக்களுக்கு பயிற்சிகள் கிடைக்காது.

-விளம்பரம்-
anandha kannan

மேலும், தற்போது இந்த கிராமிய கலைகள் தான் என்னுடைய அடையாளம். இதில் எனக்கு வருமானம் குறைவாக இருந்தாலும் எனக்கு சந்தோஷம் நிறைவாக உள்ளது. சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த காலத்தில் கூட எனக்கு இந்த அளவிற்கு சந்தோஷம் கிடையாது. அதோடு அந்த அனுபவங்கள் எல்லாம் அப்போதே முடிந்து விடும். இந்த கிராமிய கலைகள் தான் எனக்கு ஆத்மார்த்தமான அர்த்தமுள்ள பணிகளாக உள்ளது. என்னுடைய காலம் முடிந்தாலும் என் பெயர் நீண்ட காலம் வாழும். அதனால என் உயிர் இப்ப போனாலும் எனக்கு சந்தோஷமாகத் தான் இருக்கும் என்று ஆனந்தத்துடன் கூறினார் ஆனந்த கண்ணன்.

Advertisement