தெறி படத்தில் நடித்த மீனா மகளா இது ? என்ன இப்படி கிடுகிடுன்னு வளந்துட்டாரு.

0
1371
Theri

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார் நடிகை மீனா. சூப்பர் ஸ்டார் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா அதன் பின்னர் அவர் படத்திலேயே கதாநாயகியாகி பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும், பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் மீனா. 2009 ஆம் ஆண்டு நடிகை மீனா வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்/ திருமணத்திற்கு பின்னர் இவருக்கு நைனிகா என்ற அழகான பெண் குழந்தையும் பிறந்தது. மேலும், இவரது மகள் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்திருந்தார்.

அட்லி மற்றும் விஜய் கூட்டணியில் முதன் முறையாக வெளியான ‘தெறி ‘திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப் படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் விஜய்யின் மகள்களாக பிரபல நடிகை மீனாவின் மகளான பேபி நைனிகாவும், விஜய்யின் மகள் திவ்யா ஷாஷாவும் நடித்திருந்தனர். தெறி படத்திற்கு பின்னர் வேறு எந்த படத்திலம் காண முடியவில்லை. சமீபத்தில் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் மீனா.

- Advertisement -

அதில் அடையாளம் தெரியாத படி வளர்ந்து இருக்கும் பேபி நைனிகாவை கண்டு நமக்கே வியப்பாக தான் இருந்தது. பேபி நைனிகா கதாபாத்திரத்தில் முதலில் நடிப்பதாக இருந்தது பிரபல நடிகரான ஸ்ரீயின் மகள் தானாம். நடிகர் ஸ்ரீ பிரபல இசையமைப்பாளரான சங்கர் கணேஷின் மகன் என்பது குறிபிடத்தக்கது. மேலும், பல்வேறு சீரியல்களில் தற்போது யாரடி நீ மோகினி தொடரில் நடித்து வருகிறார். அதே போல நடிகர் ஸ்ரீ பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்திலும் நடித்திருந்தார். மேலும், இவர், சஞ்சீவ், விஜய் ஆகியோர் நண்பர்கள் என்பதும் குறிபிடத்தக்கது.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஸ்ரீயிடம், அவரது மகள் குறித்த கேட்கபட்ட போது, தெறி படத்தில் விஜய்யின் மகளாக என் மகளை தான் நடிக்க வைக்க முதலில் கேட்டார்கள், நான் தான் முடியாது என்று சொல்லிவிட்டேன். என்னுடைய உறவினரின் திருமணத்தில் இயக்குனர் அட்லீ என்னுடைய மகளை பார்த்துள்ளார். என் மகள் எப்போதும் துரு துறுவென இருப்பார். அதன் பின்னர் அவருடைய உதவியாளரை விட்டு என் மகளை தெறி படத்தில் விஜய் மகளாக நடிக்க கேட்டார். ஆனால், நான் முடியாது என்று சொல்லிவிட்டேன் ஏனென்றால் அது படிக்கின்ற வயசு என்று கூறியிருந்தார் ஸ்ரீ.

-விளம்பரம்-
Advertisement