2021 ஐ பி எல் போட்டியில் தோனியை ஏலம் எடுக்க ஆர்வம் காட்ட போகும் மூன்று அணிகள் இவை தான்.

0
1540
Dhoni
- Advertisement -

இந்தியாவில் வரும் மார்ச் மாதம் பதிமூன்றாவது ஐபிஎல் டி20 தொடர் துவங்க உள்ளது இந்த தொடருக்கும் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கேப்டனாக செயல்பட உள்ளார். ஒருவேளை தோனி ஏலத்தில் பங்கேற்று இருந்தால் தோனி என்ற ஒரு சொல் மட்டுமே போதும் ஏலத்தொகை நிச்சயம் கோடிகளில் எகிறி இருக்கும். ஏனெனில் முதல் சீசனில் இருந்து சென்னை அணிக்காக விளையாடி வரும் தோனி இதுவரை மூன்று முறை ஐபிஎல் கோப்பையையும் ஒரு முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பையை பெற்றுத் தந்து சிறப்பான கேப்டனாக விளங்கி வருகிறார்.

-விளம்பரம்-
Image result for ipl auction

- Advertisement -

இந்நிலையில் அடுத்த ஆண்டு 2020 ஆம் வருடம் ஒருவேளை தோனி ஏலத்தில் விடப்பட்ட அவரை எடுக்க நிச்சயம் மிகப்பெரிய அணிகள் ஆர்வம் காட்டும். அந்த மூன்று அணிகள் குறித்து இந்தப் பதிவில் காணலாம்.ஆனால், தோனியை 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் ஏலத்தில் விடாமல் ரைட்டு மேட்ச் கார்டு எனும் முறை மூலம் தக்கவைக்க சென்னை அணியின் உரிமையாளர் சீனிவாசன் முடிவெடுத்துள்ளார். இருப்பினும் ஒருவேளை தோனி ஏலத்திற்கு வரும் பட்சத்தில் அவரை எடுக்க ஆர்வம் காட்டும் அணிகளில் முதல் அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் இருக்கிறது.

இதையும் பாருங்க : கதை பிடித்து போனதும் பைக் வாங்கி கொடுத்துட்டார். அஜித் குறித்து பேசிய இயக்குனர். வைரலாகும் வீடியோ.

ஏனெனில் முதல் ஐபிஎல் சீசனில் கோப்பையை வென்ற பிறகு அதனை தொடர்ந்து இதுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பெரியதாக ஐபிஎல் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.எனவே, தோனியை நிச்சயம் அந்த அணி ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டும். அதனைத் தொடர்ந்து இரண்டாவது அணியாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, தோனியை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டும். ஏனெனில் 13 சீசனில் 12 கேப்டன் களை அந்த அணி மாற்றியுள்ளது. இதன் காரணமாக நிலையான ஒரு கேப்டன் மற்றும் அனுபவம் உள்ளவர். கேப்டன் காரணமாக தோனியை அவர்கள் எடுக்க வாய்ப்பு உள்ளது.

-விளம்பரம்-
Image result for dhoni ipl auction

அதற்கு அடுத்து மூன்றாவது அணியாக டெல்லி கேப்பிடல் அணி தோனியின் எடுக்க ஆர்வம் காட்டும் என்று தெரிகிறது. ஏனெனில் இளம் வீரர்கள் பலர் டெல்லி அணியில் இருந்து சிறப்பாக செயல்பட்டாலும் அவர்களால் முக்கிய போட்டிகளில் மற்றும் முக்கியமான சூழ்நிலையை சிறப்பாக செயல்பட முடியாமல் போகிறது. இதன் காரணமாக தோனி எடுத்தால் அவரது அனுபவம் மற்றும் முடிவுகளை எடுக்கும் திறன் மூலமாக டெல்லி அணிக்கு சிறப்பான வெற்றிகள் கிடைக்கும் என்பதால் அவர்களும் ஆர்வம் காட்டுவார்கள் என்று தெரிகிறது. இருப்பினும் தோனி ஐபிஎல்லில் விளையாடும் வரை சென்னை அணிக்காக மட்டும் விளையாடுவேன் என்று தோனி ஏற்கனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement