விஜய் மட்டும் அரசியலுக்கு வந்தால் – திருமாவளவன் ஓபன் டால்க். இத நீங்க எதிர்பார்த்திருக்க மாடீங்க.

0
875
thiruma
- Advertisement -

தற்போது சோசியல் மீடியா முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தின் தேர்தல் வெற்றி குறித்து தான் கருத்துக்கள் போய் கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் சில மாதங்களாகவே உள்ளாட்சித் தேர்தல் குறித்து பல செய்திகள் வந்தது அனைவருக்கும் தெரியும். அதிலும் தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் கடந்த 6 மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. ஊராட்சி வார்டு கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு பல கட்சி சார்பில் வேட்பாளர்கள் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்து இருந்தனர். அதில் விஜய் மக்கள் இயக்கம் சேர்ந்தவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டார்கள்.

-விளம்பரம்-

இது குறித்து கூட விஜய்க்கும் அவருடைய தந்தைக்கும் நிறைய கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பேச்சு வார்த்தை இல்லாமல் பிரிவில் உள்ளது அனைவருக்கும் தெரிந்தது. மேலும், ஊரக உள்ளாட்சி தேர்தலில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மொத்தம் 169 பேர் போட்டியிட்டார்கள். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 77 பேர் வெற்றி பெற்றுள்ளார்கள். விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு 77 தொகுதிகளில் வெற்றி பெற்றது அரசியல் வட்டாரத்தில் கதிகலங்க வைத்துள்ளது.

இதையும் பாருங்க : ‘எனக்கு இனி யாரும் வேண்டாம் அண்ணா’ – இரண்டாம் திருமணம் இதனால் தான் நின்றதா – Unseen வீடியோ இதோ.

- Advertisement -

அதுமட்டும் இல்லாமல் காஞ்சிபுரம் மாவட்டம் வார்டு உறுப்பினர் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட பிரபு என்பவர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தார். இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் பலரும் விஜய் மக்கள் இயக்கத்தின் வெற்றியை குறித்து பல கருத்துக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர். அதோடு நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா என்றும் பல தரப்பினர் கூறி வருகின்றனர். இந்நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் விஜய் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பது, ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது அனைவருக்கும் தெரிந்ததே. மேலும், விஜய்யின் மக்கள் இயக்கத்தினர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றது விஜய்யின் அரசியல் வருகைக்கான ஒத்திகையாக பார்க்க முடியாது. அப்படி நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் விடுதலை சிறுத்தைகள் அவரை வரவேற்கும் என்று கூறியிருந்தார். இப்படி இவர் கூறிய கருத்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. உண்மையிலேயே விஜய் அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்பதை அவரே சொன்னால் மட்டும் தான் தெரியும்.

-விளம்பரம்-
Advertisement