இந்திய வங்கி வரலாற்றில் மிகப்பெரிய கொள்ளை – ‘துணிவு’ படத்தின் கதை இந்த உண்மை சம்பவம் தானா ? First Lookலேயே Hint இருக்கே.

0
774
- Advertisement -

அஜித்தின் துணிவு படத்தின் கதை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது. இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் ரிலீசாகி இருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தை வினோத் இயக்கி இருந்தார் மற்றும் போனிகபூர் தயாரித்து இருந்தார். மேலும், அஜித்தின் வலிமை படம் வசூலில் வாரி இறைத்து இருந்தது என்று இந்த படத்தின் தயாரிப்பாளரே அறிவித்து இருந்தார். தற்போது வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த படம் பல மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கியது.

- Advertisement -

துணிவு படம்

அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த கதையில் அஜித் மிகவும் இன்வால்வ் ஆகி இருப்பதால் அவரது லுக்கை அவரே டிசைன் செய்து இருக்கிறார். மேலும், இந்த படத்தில் அஜித்திற்கு இரட்டை வேடம் என்று கூறப்படுகிறது. இதனால் அஜித் இந்த படத்திற்காக 20 முதல் 25 கிலோ வரை எடை குறைத்திருக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடிக்கிறார்.

படம் குறித்த தகவல்:

இந்த படத்திற்கு துணிவு என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மேலும், நேற்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. போஸ்டர் வெளியானதை அடுத்து ரசிகர்கள் பலரும் சோசியல் மீடியாவில் வைரலாக்கி கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் இந்த படத்தின் கதை குறித்த தகவல் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, அஜித் நடிக்கும் துணிவு படம் ஒரு வங்கி கொள்ளை சம்பந்தமான கதை என்ற தகவல் அனைவரும் அறிந்த ஒன்று. இந்த கதை உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்ட கதையாம்.

-விளம்பரம்-

படத்தின் கதை:

பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து தான் இயக்குனர் வினோத் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். அதாவது, கடந்த 1985 ஆம் ஆண்டு 12 முதல் 15 சீக்கியர்கள் காவல் காவல்துறையின் ஆடை அணிந்து வங்கியில் கொள்ளை அடிக்க பயங்கரமான ஆயுதங்களுடன் சென்றிருக்கின்றனர். அவர்கள் வங்கியில் கொள்ளை அடித்த மொத்த பணத்தின் மதிப்பு மட்டுமே 4.5 மில்லியன் அமெரிக்க டாலராம். இந்திய வரலாற்றிலேயே வங்கிக் கொள்ளையில் இது தான் மிகப்பெரிய கொள்ளை என்றும் கூறப்பட்டது. அது மட்டும் இல்லாமல் இந்த வங்கி கொள்ளை நடந்த போது வங்கி ஊழியர்கள், வங்கி வாடிக்கையாளர்கள், வங்கியை கொள்ளையடித்தவர்கள் என யாருக்குமே ஒரு சிறிய காயம் கூட ஏற்படவில்லை.

உண்மை சம்பவம்:

அந்த அளவிற்கு சூப்பர் மாஸ்டர் பிளான் போட்டு வங்கியை கொள்ளை அடித்து இருந்தார்கள். இதை போலீசாரே பாராட்டியிருந்ததாகவும் செய்திகள் வெளியாகி இருந்தது. பஞ்சாபில் நடந்த இந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தான் வினோத் அவர்கள் அஜித்தின் துணிவு படத்தை எடுப்பதாக கூறப்படுகிறது. மேலும், படத்தில் பர்ஸ்ட் லுக்கில் கூட ‘கைரேகை, ரூபாய் நோட்டில் இடம்பெறும் எழுத்துக்கள்’ என்று இடம்பெற்று இருப்பதை பார்க்கும் போது இது கண்டிப்பாக ஒரு கொள்ளை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்படும் படம் போல தான் இருக்கிறது என்று ரசிகர்கள் கணித்து வருகின்றனர்.

Advertisement