ரவுடி பேபி சூர்யா மீது பாய்ந்தது குண்டர் சட்டம் – சிக்காவும் சிக்கினார். காரணம் இந்த புகார் தான்.

0
592
- Advertisement -

யூடியூப் பிரபலம் ரவுடி பேபி சூர்யா- சிக்கா ஜோடியை கிரைம் போலீஸார் கைது செய்த நிலையில் தற்போது அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சமூக வலைதளத்தின் மூலம் பல்வேறு நபர்கள் பிரபலமாகியுள்ளனர். அதில் பெண்கள் சிலர் ஆபாசமாகவும், விதவிதமான வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்கள். சமீப காலமாகவே சமூக வலைத்தளங்களில் சில ஜென்மங்கள் சில தேவையில்லாத அட்டூழியங்களை செய்து வருகிறார்கள். அதிலும் டிக் டாக் என்ற ஒன்று இருந்தபோது பலபேர் அதை தவறான வழியில் பயன்படுத்தி இருந்தார்கள். டிக் டாக் தடை செய்யப்பட்டவுடன் டிக் டாக்கில் இருந்த அனைவரும் யூடுயூபில் தான் வீடியோகளை போட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-

அந்த வகையில் டிக் டாக் மூலம் பிரபலமானவர் தான் ரவுடி பேபி சூர்யா. இவர் திருப்பூர் மாவட்டம் செட்டிபாளையம் அடுத்த அய்யம்பாளையம் அருகே உள்ள சபரி நகரைச் சேர்ந்தவர். இவருடைய உண்மையான பெயர் சுப்புலட்சுமி. சமூக வலைதளமான டிக்டாக்கில் பெயர் தன்னுடைய பெயரை சூர்யா என்று வைத்து கொண்டார். இவருடைய நண்பர் தான் சிக்கா. இருவரும் சேர்ந்து ஆபாசமாகப் பேசுவது, வீடியோ போடுவது என்று தேவை இல்லாத வேலை செய்து கொண்டு வந்தார்கள்.

- Advertisement -

ரவுடி பேபி சூர்யா-சிக்கா ஆபாச வீடியோ:

டிக் டாக் தடை செய்யப்பட்ட பிறகு இவர்கள் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்ஸில் தன்னுடைய கவனத்தை திருப்பினார்கள். இருவருக்கும் தனித்தனியாக கல்யாணம் ஆகி குடும்பம் இருந்தாலும் எல்லாம் மறந்து ஆளுக்கு ஒரு யூடியூப் சேனல் நடத்துகிறார்கள். பின் சில நாட்கள் இவர்கள் சண்டைபோட்டு பிரிவதும், இணைவதும் வழக்கமாக வைத்திருந்தார்கள். இது குறித்து பலரும் இவர்களை திட்டி கருத்து தெரிவித்து இருந்தார்கள்.

ரவுடி பேபி சூர்யா-துபாய்காரர்:

மேலும், பிரிந்து சென்ற சிக்கா மீது கோபத்தில் இருந்த சூர்யா துபாய்காரர் ஒருவருடன் எனது வாழ்க்கையை தொடங்கப் போவதாக அறிவித்து போஸ்ட் ஒன்று போட்டிருந்தார். அதில் அவர், இவனோட வெளியில் போனாலே அவர் உங்கள் தாத்தாவா? அப்பாவா? என்று கேட்கிறார்கள். இந்த மாதிரி இருக்கும்போது உனக்கு எவ்வளவு திமிரு. இன்னும் நாலு மாதத்தில் துபாய்காரர் வந்துவிடுவான். இனி என் வாழ்க்கையை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார். இப்படி சொல்லிய ரவுடி பேபி சூர்யா மீண்டும் சிக்கா உடன் இணைந்து ஆபாசமாக வீடியோ போட்டு இருந்தார்.

-விளம்பரம்-

ரவுடி பேபி சூர்யா மீது புகார்:

இந்த நிலையில் இவர்கள் ஆபாசமாக வீடியோக்களை பதிவிட்டு வருவதாக ஜெனிபர் என்பவர் சென்னை சைபர் கிரைம் போலீசில் கமிஷனர் அலுவலகத்திலும், தமிழக டிஜிபி அலுவலகத்திலும் புகார் கொடுத்திருந்தார். இதையடுத்து கோவை சைபர் கிரைம் போலீசார் ரவுடி பேபி சூர்யாவையும், சிக்காவையும் மதுரையில் வைத்து கைது செய்துள்ளனர். இவர் மட்டுமில்லாமல் இவர் மீது நிறைய பெண்கள் புகார் கொடுத்திருக்கிறார்கள். இதனையடுத்து தான் போலீஸ் அதிரடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்தனர்.

குண்டர் சட்டம் :

மேலும், இவர்களுடைய யூடியூப் சேனலை முடக்க கோரியும் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது. கைது செய்யப்பட்ட இவர்கள் இருவரையும் தனிப்படை போலீசார் கோவை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பரிந்துரையின் பேரில் ரவுடி பேபி சூர்யாவையும் சிக்கந்தர்ஷா என்ற சிக்காவையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்

Advertisement