நானும் மனுஷன் தான், பதவியை ராஜினாமா செய்த திருப்பூர் சுப்ரமணியன்

0
432
- Advertisement -

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து திருப்பூர் சுப்ரமணியன் ராஜினாமா செய்திருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தவர் திருப்பூர் சுப்ரமணியன். இவர் சோசியல் மீடியாவில் பிரபலமானது லியோ படம் குறித்த பேட்டியினால் தான். அனைவரும் எதிர்பார்த்த விஜய்யின் லியோ படம் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம்வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கின்றார்கள். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக உருவாகி இருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் லியோ படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

- Advertisement -

திருப்பூர் சுப்ரமணியன் பேட்டி:

அதோடு உலகம் முழுவதும் லியோ படம் 600 கோடிக்கு மேல் அதிகமாக வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், லியோ லாபகரமான படமாக எங்களுக்கு அமையவில்லை. காரணம், இதுவரை தமிழ்நாட்டில் இல்லாத அளவு ஷேர் பங்கீடு வாங்கி இருக்கிறார்கள். பெரும்பாலான திரையரங்க உரிமையாளர்கள் இந்த படத்தை விரும்பி போடவில்லை. அந்த அளவு அதிகமான ஷேர் கேட்டு எல்லா தியேட்டர்களையும் கசக்கி பிழிந்து விட்டார்கள்.

லியோ படம் குறித்து சொன்னது:

படம் வசூல் அதிகமாக இருந்தாலும் அதில் எங்களுக்கு பிரயோஜனமே இல்லை. எங்களுக்கு அதில் லாபம் இல்லை. இதே படத்தை பக்கத்து மாநில கேரளாவில் 60% வெளியிட்டு இருக்கிறார்கள். எங்களிடம் 80 சதவீதம் வாங்கி இருக்கிறார்கள். இது என்ன நியாயம்? இந்த படத்துடன் இன்னொரு படம் மட்டும் வந்திருந்தால் இப்போது கிடைத்துள்ள தியேட்டரில் பாதி கூட லியோவுக்கு கிடைத்திருக்காது. வேறு படம் இல்லாததால் தான் இதை திரையிட வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் திரையிட்டோம்.

-விளம்பரம்-

திருப்பூர் சுப்ரமணியனுக்கு அனுப்பிய நோட்டீஸ்:

லியோ தயாரிப்பாளர் சொன்ன வசூல் விவரங்கள் எல்லாம் போய் என்று கூறி இருந்தார். இதனால் அவரை விஜய் ரசிகர்கள் வறுத்தெடுத்து இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் தீபாவளிக்கு ரிலீசான டைகர் 3 படத்தை திருப்பூர் சுப்ரமணியத்திற்கு சொந்தமான தியேட்டரில் காலை 7:00 மணிக்கு இரவு 11.50 க்கும் காட்சி திரைப்படப்பட்டதாக அவருடைய அனுமதி இல்லாமல் நெட்டிசன்கள் ட்விட்டரில் ஆதாரத்துடன் புகார் கூறியிருந்தார்கள். இது குறித்து அவரிடம் விளக்கம் கேட்டு தமிழக அரசின் வருவாய் துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்கள்.

பதவி ராஜினாமா செய்த திருப்பூர் சுப்ரமணியன்:

இந்த நிலையில் திருப்பூர் சுப்ரமணியன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார், அது மட்டும் இல்லாமல் இது தொடர்பாக அவர் கடிதம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் . அதில் அவர், நான் சொந்த வேலை காரணமாக பதவி விலகுகிறேன். நானும் மனிதன் தான். 100 சதவீதம் தவறு இல்லாமல் இருக்க முடியாது. எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி என்று கூறி இருக்கிறார். தற்போது இவர் வெளியிட்ட கடிதம் தான் சோசியல் மீடியாவின் வைரலாகி வருகிறது.

Advertisement