பிரச்சாரத்தில் அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்கும் திமுகவினர் – ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிக்கை.

0
1080
stalin
- Advertisement -

தேர்தல் பிரச்சாரங்களில் பார்த்து பேச வேண்டும், இல்லை என்றால் ஈரை பேனாக்கி, பேனை பெருமாள் ஆக்கி விடுவார்கள். அந்த வகையில் தற்போது திமுக சார்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது தமிழக முதல்வர் குறித்து ஆ. ராசா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெறும் முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும்.

-விளம்பரம்-

தேர்தல் நெருங்க இருப்பதால் பல்வேறு கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, முதல்வர் பழனிசாமி குறித்து பேசியவை புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

- Advertisement -

இந்த பிரச்சாரத்தின் போது திமுக தலைவர் ஸ்டாலினை புகழ்ந்தும், முதலைச்சர் எடப்பாடி பழனிசாமியை இழிவாக பேசினார். முறைப்படி பெண் பார்த்து நிச்சயம் செய்து திருமணம் நடத்தி, சாந்தி முகூர்த்தம் நடத்தி, 300 நாட்கள் கழித்து சுகப் பிரசவத்தில் பிறந்தவர் ஸ்டாலின். நல்ல உறவில், ஆரோக்கியமாக சுகப் பிரசவத்தில் பிறந்த குழந்தை ஸ்டாலின்; கள்ள உறவில் பிறந்த குறை பிரசவம் எடப்பாடி.

குறை பிரசவ குழந்தையை காப்பாற்ற, டெல்லியில் இருந்து மோடி என்ற, டாக்டர் வருகிறார் என்று பேசி இருந்தார். ஆ ராசாவின் இந்த பேச்சை அதிமுக மற்றும் பா ஜ க கட்சியை சேர்ந்த பலர் கண்டித்தனர். இப்படி ஒரு நிலையில் பிரச்சாரத்தின் போது அவதூறாக பேசுவதை கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிரச்சாரத்தில் ஈடுபடும்போது கட்சியினர் உணர்ச்சிவசப்பட்டு, கண்ணியக் குறைவான சொற்களை வெளிப்படுத்திடக் கூடாது. அப்படிப்பட்ட சொற்கள் உதிர்த்திடுவதைக் கண்டிப்பாகத் தவிர்த்திட வேண்டும் என்பதையும், அத்தகைய பேச்சுகளைக் கட்சித் தலைமை ஒருபோதும் ஏற்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

-விளம்பரம்-

திமுக கூட்டணியின் வெற்றி உறுதியாகவும் வலிமையாகவும் மக்களால் தீர்மானிக்கப்பட்டுவிட்ட நிலையில், கட்சியினரின் பேச்சுகளைத் திரித்து, வெட்டி – ஒட்டி, தவறான பொருள்படும்படி செய்து வெற்றியைத் தடுக்க நினைத்து மூக்குடைபட்டவர்கள், இப்போதும் தோல்வி பயத்தால் மீண்டும் அதே பாணியை மேற்கொண்டிருக்கிறார்கள். அவர்களது எண்ணம் ஈடேறாத வகையில், கவனத்துடன் சொற்களைப் பயன்படுத்த வேண்டும் எனக் கட்சியினரைக் கேட்டுக் கொள்கிறேன் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.

Advertisement