விஸ்வாசம் படத்தின் வில்லன் இவரா ? கசிந்த தகவல்!

0
2104
ajith
- Advertisement -

தல அஜித் நடிப்பில் அவரது அடுத்த படமான விஸ்வாசம் மீண்டும் சிவா இயக்கத்தில் உருவாகிறது. தற்போது இந்த படத்திற்கு வில்லன் மற்றும் ஹீரோயின் தேர்வு நடைபெற்று வருகிறது.

படத்தின் மற்ற டெக்னீசியன் எல்லாம் முந்தைய படமான விவேகம் படத்தில் பணியாற்றியவர்களே. மேலும், வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து 4ஆவது முறையாக இந்த கூட்டணி இணைவதால் அஜித் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும், படத்தில் ஆரம்பம் படத்தில் ஆர்யா நடித்தது போல விஸ்வாசம் படத்தில் விஜய் சேதுபதி அல்லது நிவின் பாலி ஆகியவர்களில் ஒருவர் நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

அதே போல தல அஜித்திற்கு வில்லனாக நடிகர் சரத்குமார் நடிக்கவுள்ளார் எனவும் தெரிகிறது. சரத்குமார் முன்னதாக காஞ்சனா படத்தில் திருநங்கையகா நடித்து அதில் முத்திரை பதித்திருந்தார். இதனால் படத்தில் அஜித் மற்றும் சரத்குமாரின் ஸ்க்ரீன்பிளே எப்படி இருக்கும் என்பதை பார்க்க தல ரசுகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

Advertisement