ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பின்னணி பாடகர் அருண் ராஜ காமராஜ் இயக்கிய கனா படம் இன்று (டிசம்பர் 21) வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பான இந்த படம் எப்படி உள்ளது என்பதை பார்க்கலாம்.
படம்:- கனா
இயக்குனர்:- அருண் ராஜா காமராஜ்
நடிகர்கள் : – ஐஸ்வர்யா ராஜேஸ், சத்யராஜ், சிவகார்த்திகேயன், பாத்திமா,தர்ஷன்,முனிஷ்காந்த் மற்றும் பலர்.
தயாரிப்பு : – சிவகார்த்திகேயன்
இசையமைப்பளார் :- திபு நினன் தாமஸ்
வெளியான தேதி:-21-12-2018
கதைக்களம் :
தமிழ் சினிமாவில் விளையாட்டை மையப்படுத்தி பல்வேறு திரைப்படங்கள் வேல்;வெளியாகியுள்ளது. ஆனால், பெண்கள் விளையாட்டை மையமாக வெளியான படங்கள் மிகவும் குறைவே. அந்த வகையில் பெண்கள் கிரிக்கட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது தான் இந்த படம்.
கிராமத்தில் இருக்கும் முருகேசன் (சத்யராஜ்) விவசாயம் மற்றும் கிரிக்கெட் மீது உயிராய் இருந்து வருகிறார். அவரது மனைவி பாத்திமா மற்றும் மகள் கௌசல்யா(ஐஸ்வர்யா ராஜேஷ்). படத்தின் ஆரம்பத்தில் இந்திய அணி உலக கோப்பையில் தோற்றுப்போவதை பார்த்து சத்யராஜ் கண்ணீர் வடிக்கிறார்.
தனது தந்தை முதல் முறையாக அழுவதை காணும் ஐஸ்வர்யா, இந்திய கிரிக்கெட் அணியில் கலந்து கொண்டு தனது தந்தைகாக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவுடன் தனது கிரிக்கெட் கனவை தொடங்குகிறார். ஆனால், கிராமத்தில் பொம்பள பிள்ளையை கிரிக்கெட் விளையாட வைப்பதா என்று பலரும் யேசுகிறார்கள்.
ஆனால், இதனை எதையும் கண்டு கொள்ளாமல் ஐஸ்வ்ர்யா ராஜேஷ் தனது கிரிக்கெட் கனவை நோக்கி பயணிக்கிறார். அவருக்கு உறுதுணையாக விவசாயத்தை பார்த்துக்கொண்டே மகளுக்கு உதவியாக இருக்கிறார் சத்யராஜ். மேலும், கிரிக்கெட் விளையாட்டிற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் விவசாயத்தின் முக்கயத்துவத்தோடும் கதை நகர்கிறது.
இறுதியில் ஐஸ்வர்யா தனது தந்தைக்காக கையில் எடுத்த தனது கனவில் ஜெயித்தாரா. அதற்காக அவர் என்னென்ன தடைகளை எல்லாம் தாண்டி வந்தார் என்பது தான் மீதி கதை.
ப்ளஸ்:
படத்திற்கு முதலில் இயக்குனருக்கு தான் பாராட்டு சொல்ல வேண்டும். முதல் படைப்பு என்ற எவ்வித சந்தேகமும் இல்லாமல் அருமையான படைப்பை கொடுத்துள்ளார். படத்தில் அவர் தேர்தெடுக்கும் கதாபாத்திரம் மேலும் பலம். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் சிறப்பு தோற்றமாக இல்லாமல் ஒரு அற்புதமான தோற்றத்தில் வருகிறார். அதனை நீங்கள் பார்த்தால் தான் உணர முடியும். கிரிக்கெட் மட்டுமின்றி விவசாயத்தை பற்றியும் பேசியுள்ளது அருமை. அதிலும் அதனை வேறு ட்ராக்கில் கொண்டு செல்லாமல் படத்தோடு எடுத்து சென்றுள்ளார் இயக்குனர்.
படத்திற்காக ஐஸ்வர்யா ராஜேஷ் எடுத்துக்கொண்ட பயிற்சி படத்தில் தெளிவாக தெரிகிறது. படத்தில் வரும் கடைசி 30 நிமிட காட்சிகளில் வரும் கிரிக்கெட் போட்டி நிஜமான கிரிக்கெட் போட்டியை கண்டது போல ஒரு எண்ணத்தை நமக்கு ஏற்படுத்துகிறது.
மைனஸ்:
ஏற்கனவே தமிழ் சினிமாவில் வந்த கதை என்பதால் இறுதி க்ளைமாக்ஸ் என்ன என்பதை நாம் படத்தின் ஆரம்பத்திலேயே கணிக்க முடியும். படத்தின் இரண்டாவது பாதியில் அழுத்தமான திரைக்கதை கொஞ்சம் தொய்வடைகிறது. குறிப்பாக ஐஸ்வர்யா ராஜேஷ் சர்வதேச கிரிக்கெட் அணியில் சேரும் காட்சிகள் சுவாரசியம் குறைவு. படத்தின் இசையும் அந்த அளவில் மனதில் நிற்கவில்லை.
இதையும் படியுங்க : மீண்டும் ஒரு தனி ஒருவனா..!அடங்கமறு படத்தின் முழு விமர்சனம் இதோ..!