மீண்டும் ஒரு தனி ஒருவனா..!அடங்கமறு படத்தின் முழு விமர்சனம் இதோ..!

0
1842
adangamaru
- Advertisement -

டிக் டிக் டிக் என்ற வெற்றிபடத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகியுள்ளது ‘அடங்கமறு’ திரைப்படம். அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தின் விமர்சனத்தை தற்போது காணலாம்.

-விளம்பரம்-

படம்:- அடங்கமறு
இயக்குனர்:- கார்த்திக் தங்கவேல்
ஜெயம் ரவி, ரஷி கண்ணா, சம்பத், பூர்ணா, பொன்வண்ணம்,முனீஸ்காந்த், மைம் கோபி,அழகம் பெருமாள்.
இசையமைப்பளார் :-  சாம் சி எஸ்  
வெளியான தேதி:-21-12-2018

- Advertisement -

கதைக்களம் :

நேர்மையான காவல் உதவி ஆய்வாளரான ஜெயம் ரவிக்கு ஐ.பி.எஸ். அதிகாரியாக வேண்டும் என்பது கனவு. அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, அண்ணன் பிள்ளைகள், காதலி (ராஷி கண்ணா), நண்பர்கள் என சந்தோஷமாக இருந்து வருகிறார் ஜெயம் ரவி.

-விளம்பரம்-

போலீஸ் அதிகாரியான ஜெயம் ரவி டெக்னாலஜியிலும் கிங்காக இருக்கிறார். வழக்கம் போல நேர்மையான அதிகாரி சந்திக்கும் உயர் அதிகாரிகளின் அழுத்தம், ட்ரான்ஸ்பர் என்று சிக்கி வருகிறார் ஹீரோ. ஆனால், யாராக இருந்தாலும் தவறு செய்தால் சட்டம் தன் கடமையை செய்யும் என்று வெறப்பாக நிற்கிறார் ஜெயம் ரவி.

ஒரு கட்டத்தில் இளம் வயதுள்ள ஒரு பெண்ணை பெரிய இடத்தை சேர்ந்த நான்கு இளைஞ்சர்கள் சேர்ந்து கற்பழித்துவிடுகின்றனர். இந்த வாழ்க்கை கொலை என்று முடித்துவிடுமாறு உயர் அதிகாரிகள் ஜெயம் ரவிக்கு கட்டளையிடுகின்றனர். ஆனால், அடங்கமறுக்காத ஜெயம் ரவி அந்த நான்கு இளைஞர்களையும் கைது செய்கிறார் ஜெயம் ரவி. பின்னர் அவர்கள் உயர் அதிகாரிகளினாலும், அவர்களது பெற்றோர்களின் செல்வாக்காலும் வெளியில் வருகின்றனர்.

பின்னர் ஏமாற்றமுடன் வீடு திரும்பும் ஜெயம் ரவி வீட்டில் சென்று பார்த்தால் அவரது குடும்பத்தினர் கொள்ளபட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைகிறார். பின்னர் அந்த பெண்ணின் வழக்கில் தொடர்புடைய அந்த நான்கு இளைஞ்சர்களையும், அவர்களது பெற்றோர்களையும் ஜெயம் ரவி எப்படி பழி வாங்குகிறார் என்பது தான் கதை.

ப்ளஸ் :

ஒரு போலீஸ் அதிகாரி நேர்மையாக செயல்பட்டதற்காக பழிவாங்கப்படுகிறான். தனது இழப்புக்கு காரணமான வில்லன்களை அந்த போலீகாரன் எப்படி திருப்பி அடிக்கிறார். இது போன்ற கதைகள் பல வந்தாலும் அதில் சில டெக்னாலஜி வித்தைகளை காட்டி நம்மை கவர்கிறது இந்த படம்.

படத்தில் வழக்கம் போல ஜெயம் ரவியின் நடிப்பு அசத்தல். புதுவரவான ரஷி கண்ணாவின் பங்கு அளவாக பயன்படுத்பட்டுள்ளது. ஜெயம் ரவி இதுபோன்று பல படங்களில் பார்த்த கதாபாத்திரம் என்றாலும் ஒன் மேன் ஷோவாக படத்தை தாங்கி செல்கின்றார். அதிலும் போலிஸ் விசாரணையை அவர் அசாட்டாக டீல் செய்யும் விதம்.

மைனஸ் :

இதுபோன்ற கதைக்களத்திற்கு ரொமான்ஸ் காட்சிகளை சற்று குறைத்திருக்கலாம். மேலும் சாம் சி எஸ் சின் இசை அவ்வப்போது கை கொடுக்கவில்லை. அதே போல vfx காட்சிகளும் கொஞ்சம் வலுவிழந்து காணப்படுகிறது. படத்தில் சீட்டின் நுனி சீன்கள் மிஸ்ஸிங்.

இறுதி அலசல் :

தனி ஒருவன், மிருதன் போன்ற படங்களில் நடித்த ஜெயம் ரவிக்கு இதுபோன்ற கதாபத்திரம் புதிதல்ல. இருப்பினும் அதனை வேறு பாணியில் அளித்துள்ளார் இயக்குனர். தனி ஒருவன் போன்று ஒரு கதை இல்லை என்றாலும் அதில் பாதி அளவிற்கு இந்த படம் பூர்த்தி செய்துள்ளது என்றே கூறலாம். மொத்தத்தில் இந்த படத்திற்கு Behind Talkies -ன் மதிப்பு 7.8/10.

இதையும் படியுங்க : மாரி 2-வின் மாஸான விமர்சனம்..!செஞ்சாரா இல்லையா மாரி..!

Advertisement