ஐபிஎல் தொடர் துவங்க இன்னும் மூன்று நாட்களே உள்ளது. இந்நிலையில் சென்னை அணியின் புதிய ஆந்தம் பாடல் வெளியாகியுள்ளது. ஒட்டுமொத்த ஐபிஎல் தொடருக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அந்த அளவிற்கு சென்னை அணிக்கு மட்டும் ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும் சென்னை அணிக்கு கிடைக்கும் வரவேற்பை மற்ற அணிகள் பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு சென்னை அணிக்கு ரசிகர்கள் பேராதரவு அளித்து வருகின்றனர். சென்னை அணி தடை செய்யப்பட்ட போதும் சென்னை அணி வீரர்கள் சென்னையை மறக்கவில்லை .
மீண்டு வந்த சென்னை சென்ற வருடம் பலமாக வரவேற்று கோப்பையை வெல்ல ரசிகர்களும் உறுதுணையாக இருந்தனர்.
சென்னை அணிக்காக TopTuckerCSK என்ற ஒரு புதிய பாடல் ஒன்று உருவாகியுள்ளது. தேனிசை தென்றல் தேவா பாடியுள்ள இந்த பாடலுக்கு சரண் பிரகாஷ் என்பவர் இசையமைத்துள்ளார். மேலும், சாண்டி இந்த பாடலுக்கு நடனமாடியுள்ளார் தற்போது இந்த பாடல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.