ஓரின சேர்க்கை பற்றி சர்ச்சையான ட்வீட் பதிவு செய்த பிரபல நம்பர் நடிகை..!

0
1351
trish
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் நடிகை த்ரிஷா, விஜய், அஜித், விக்ரம், சூர்யா
என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள த்ரிஷா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி படத்திலும் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

trisha

- Advertisement -

சமீபத்தில் இந்தியாவில் ஓரின சேர்க்கை தவறு இல்லை என்று உச்ச நீதி மன்றம் தீர்பளித்ததை வரவேற்கும் வகையில் ட்வீட் செய்துள்ள திரிஷ்வின் கருத்திற்கு வரவேற்பும், கடும் விமர்சனமும் கிளப்பியுள்ளது. இந்தியாவில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் விதிக்கப்படும் என சட்டப்பிரிவு 377-ல் கூறப்பட்டிருக்கிறது.

ஆனால் பாலியல் உறவு யாருடன் கொள்வது என்பது அவரவர் உரிமை எனவே சட்டப்பிரிவு 377-ஐ நீக்க வேண்டும் என தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்து குரல் எழுப்பப்பட்டு வந்தனர். கடந்த 2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் இந்தியாவில் ஒன்றினை சேர்க்கை குற்றம் என்று அறிவித்திருந்தது உச்ச நீதிமன்றம். நீண்ட வருடமாக இருந்த இந்த சட்டம் இன்று (செப்டெம்பர் 6) இந்தியாவில் ஓரின சேர்க்கை குற்றமல்ல என்று தீர்ப்பளித்தது உச்சநீதி மன்றம்.

-விளம்பரம்-

அந்த தீர்ப்பில் இந்த சமூகத்தில் ஓரின சேர்க்கையாளர்களுக்கும் சம உரிமை உண்டு. எனவே ஓரின சேர்க்கை எதிரான சட்டப்பிரிவு 377 ஐ நீக்கப்படுகிறது எனக் கூறி உச்ச நீதிமன்றம் அதிரடி தெரிவித்து விட்டது. பல்வேறு தரப்பினர் இந்த தீர்ப்பை எதிர்த்து வரும் நிலையில், ஓரினசேர்க்கையாளர்கள் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

இந்நிலையில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷா இந்த பாதையில் தான் இந்தியா செல்ல வேண்டும், #அனைவருக்கும் சம உரிமை # செக்ஷன் 377 # ஜெய் ஹோ என்று பதிவிட்டுள்ளார். த்ரிஷாவின் இந்த பதிவிற்கு பலரும் வரவேற்றாலும், ஒரு சிலர் நீங்களும் ஓரின சேர்க்கையாளரா என்று நடிகை த்ரிஷாவை கிண்டலடித்து வருகின்றனர்.

Advertisement