திரைத்துறையில் மிகப்பெரும் நட்சத்திரமாக வந்திருக்கவேண்டியவன் – பரிதாபமாக உயிரிழந்த தனது பட நடிகர் குறித்து பாரதிராஜா உருக்கம்.

0
1881
- Advertisement -

பல ஆண்டுகளாக படுத்த படுக்கையாய் இருந்த பாரதி ராஜா பட நடிகர் பாபு இன்று காலமாகி இருக்கிறார். சினிமாவைப் பொருத்தவரை உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர் நடிகைகள் மட்டும்தான் சொகுசான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், ஒரு சில நடிகர் நடிகைகளின் வாழ்க்கை எப்போதும் சோகத்தில் தான் முடிகிறது. நிலை கெட்டப்போய் உயிரை காப்பாற்ற மக்களிடம் கெஞ்சிய பல நடிகர்களின் வீடியோக்கள் கூட நாம் கண்டிருப்போம். அவ்வளவு ஏன் பறவை முனியம்மா துவங்கி சமீபத்தில் உயிரிழந்த நடிகை சிந்து வரை எத்தனையோ சினிமா பிரபலங்கள் மக்களிடம் உதவி கேட்டு வீடியோ வெளியிட்டனர்.

-விளம்பரம்-

அவர்களுக்கு மக்களும் சினிமா பிரபலங்கள் உதவி செய்தும் கூட அவர்கள் உயிர் பிரிந்தது தான் சோகம். அந்த வகையில் தமிழ் சினிமாவின் 90 காலகட்டங்களில் கொடிகட்டி பறந்த நடிகர் பாபுவும் இப்படி ஒரு அவள நிலையை சந்தித்து இருக்கிறார். கிராமத்து மண் வாசனை மாறாமல் படம் எடுக்கும் பாரதி ராஜா அறிமுகம் செய்த எத்தனையோ நடிகர் நடிகைகளில் நடிகர் பாபுவும் ஒருவர் தான்.

- Advertisement -

பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1990-ம் ஆண்டு வெளியான என் உயிர் தோழன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பாபு.இந்த படத்தில்  அடிமட்ட அரசியல் தொண்டனாக வந்து அனைவரையும் தனது நடிப்பால் கவர்ந்தவர். “என் உயிர்த் தோழன்” படத்திற்கு பின்னர் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. கிட்டத்தட்ட 14 படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டார் பாபு. தாயம்மா, பொண்ணுக்கு சேதி வந்தாச்சு உள்ளிட்ட உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

14 படங்களில் ஒப்பந்தமானாலும் நான்கைந்து படங்களில் மட்டுமே நடித்தார். அதற்கு காரணம் “மனசார வாழ்த்துங்களேன்” படத்தில் நடித்தபோதுஒரு சண்டைக் காட்சிக்காக மாடியிலிருந்து குதித்தபோது அவருக்கு முதுகில் அடிபட்டது. அதன் பின்னர் தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்த போதிலும், பாபுவால் அதன் பிறகு எழுந்து நடமாட முடியவில்லை. படுத்த படுக்கையகி சிகிச்சை பெற்று வந்தார் நடிகர் பாபு.

-விளம்பரம்-

கடந்த 30 வருடமாக படுக்கையில் இருந்தபடி சிகிச்சை பெற்று வந்தார்.  மருத்துவமனையில் படுத்த படுகையாக இருந்து சிகிச்சை பெற்று வரும் நடிகர் பாபுவை பாரதிராஜா நேரில் சந்தித்து கண் கலங்கியுள்ளார். இதுகுறித்த வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வெளியாகியது. இப்படி ஒரு நிலையில் நடிகர் பாபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பாபுவின் இறப்பிற்கு பாரதி ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘

திரைத்துறையில்
மிகப்பெரும் நட்சத்திரமாக
வந்திருக்கவேண்டியவன்
படப்பிடிப்பில் நடந்த விபத்தில்
30 வருடத்திற்கு மேலாக படுக்கையிலேயே தன்னம்பிக்கையுடன்
வாழ்ந்து மறைந்த
” என் உயிர் தோழன் பாபு ” வின்
மறைவு மிகுந்த மனவேதனை
அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல் ‘ என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement