நான் தான் போராட்டம்லா வேணாம்னு சொல்லி அனுப்பிச்சேன், நான் பைக் ஓட்டுவேன் – சிறை சென்று வந்தும் திருந்தாத வாசன்.

0
312
- Advertisement -

கடந்த செப்டம்பர் மாதம் விபத்தில் சிக்கிய TTF வாசன் மீது பாலுச்செட்டி சத்திரம் காவல் துறையினர் 279 IPC மனித உயிருக்கு ஆபத்து உண்டாகும் வகையில் அல்லது காயம் அல்லது தீங்கு ஏற்படும் விதத்தில், ஒரு வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டுவது, 308 IPC பிறருடைய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் முறையில் அசட்டுத் துணிச்சலுடன் வாகனத்தை இயக்குவது உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் புழல் சிறையில் அடைக்கப்பட்ட TTF வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகள் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

-விளம்பரம்-

டிடிஎஃப் வாசன் தரப்பில் ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது ttf வாசன் தரப்பில் மனுதாரரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டு விட்டது. இதனால் , இனி அவர் வாகனம் ஓட்ட இயலாது. மேலும், அவர் 40 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்து வருவதால், அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என்று வாதிட்டது.

- Advertisement -

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மூன்று வாரங்களுக்கு, டிடிஎஃப் வாசன் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இந்த நிலையில் சிறையில் இருந்து வெளியில் வந்த டிடிஎஃப் வாசன் பத்திரிக்கையாளர் சந்தித்தபோது பேசியதாவது சிறை அனுபவம் மிகவும் கஷ்டம் தான் இருந்தாலும் உள்ளே எனக்குத் தெரிந்த சிறைவாசிகள் உள்ளே இருந்ததால் அவர்கள் எனக்கு உதவி செய்தார்கள்.

பைக்தான் என்னுடைய வாழ்க்கை என்னுடைய பெஷனை தான் நான் என் புரோபஷனாக மாற்றி இருக்கிறேன். அப்படி இருக்கும்போது பத்து வருடம் என்னுடைய ஓட்டுநர் உரிமையை ரத்து செய்து இருப்பது நியாயமே இல்லாமல் இருக்கிறது. இது திருத்தணும் என்பது போல இல்லாமல் என் வாழ்க்கை அழிக்கனும் என்பது போல இருக்கிறது. இருந்தாலும் பிரச்சனை கிடையாது என் மீது கொடுத்த புகாரே தவறாக இருக்கிறது. நான் விபத்தில் சிக்கியவுடன் மயங்கி விட்டேன்.

-விளம்பரம்-

ஆனால் புகாரில் புதுசு புதுசாக எழுதி இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர் ஒருவர் இனி பைக் ஓட்ட முடியாது என்பதால் இனி படத்தில் முழு கவனம் செலுத்தப் போகிறீர்களா என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் அளித்த டிடிஎஃப் வாசன் பைக்கும் ஓட்டுவேன் படத்திலும் நடிப்பேன். பேஷனை எப்போதும் விட்டுக்கொடுக்க முடியாது என்று கூறினார். இதற்கு பத்திரிக்கையாளர் உங்களுடைய ஓட்டுனர் உரிமை தான் ரத்து செய்து விட்டார்களே அப்போது எப்படி பைக் ஓட்டுவீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த ttf வாசன் இன்டர்நேஷனல் லைசன்ஸ் எடுக்கலாம், மேல்முறையீடு ஏதாவது செய்யலாம், என்னுடைய கை போனதை விட லைசென்ஸ் போனது தான் கண் கலங்கி விட்டேன் என்று கூறி இருந்தார். இதனைத் தொடர்ந்து நீங்கள் உள்ளே சென்றதும் உங்கள் ரசிகர்கள் சிலர் போராட்டம் நடத்துவேன் என்றெல்லாம் பேசி இருந்தார்களே என்று கேட்கப்பட்டதற்கு அதையெல்லாம் செய்யாமல் இருந்ததே நல்லது. என்னை அஜீஸ் பார்க்க வரும்போது கூட அது எல்லாம் வேண்டாம் என்று சொல்லித்தான் அனுப்பினேன். விரைவில் லைசன்ஸ் வாங்கவும் வெளிநாட்டிற்கு செல்லுவோம்

Advertisement