வெறும் குட் பை மட்டுமல்ல’ அன்பே வா சீரியலில் இருந்து விலகும் பூமிகா – அவரே சொன்ன காரணம்.

0
723
- Advertisement -

அன்பே வா சீரியலில் இருந்து கதாநாயகி டெல்னா விலகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் தொலைக்காட்சி நிறுவனம் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை சீரியல்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகின்றன. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியல் டிஆர்பியில் முக்கிய இடத்தை வகித்து வருகிறது. இந்த சீரியல் 2020 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், இடையில் இந்த சீரியலில் இருந்து தொடர்ந்து நடிகைகள் காரணமின்றி வெளியேறி இருந்தார்கள்.

-விளம்பரம்-

இருந்தாலும், சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீரியல் பூமிகா மற்றும் வருனின் காதல் கதையை மையாக கொண்டு செல்கிறது. ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் எதிரிகளாக இருந்தார்கள். பின் காதலித்து திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். இருந்தும் அவர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். தற்போது இவர்களுக்கு எதிராக வருனின் சகோதரியாக வாசுகி இருக்கிறார். பின் பல போராட்டங்களுக்குப் பிறகு வருண்- பூமிகா இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். இருந்தாலும் இவர்களுடைய திருமணத்தை வழக்கம்போல் வாசுகியும் அவரின் அம்மாவும் எதிர்கிறார்கள்.

- Advertisement -

அன்பே வா சீரியல்:

இந்த முறை இவர்களுக்கு துணையாக ஜெனி வருகிறார். இவர் வருணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பல திட்டங்கள் போடுகிறார். இப்படி இருக்கும் நிலையில் சீரியலில் பூமிகாவிற்கு விபத்து ஏற்படுகிறது. அதில் பூமிகா இறந்தது போல காண்பிக்கிறார்கள். ஆனால், பூமிகா உயிருடன் இருப்பது வருண், மற்றவர்கள் யாருக்கும் தெரியவில்லை. இப்படி அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பான திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், சீரியலில் விராட் என்பவர் நாயகனாக நடிக்கிறார். டெல்னா டேவிஸ் என்பவர் நாயகியாக நடித்து வருகிறார்.

சீரியலில் விலகிய டெல்னா:

இந்த நிலையில் சீரியலில் கதாநாயகியாக நடித்திருக்கும் டெல்னா டேவிஸ் சீரியலை விட்டு விலகிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. டெல்னா டேவிஸ் கேரளாவை சேர்ந்தவர். இவர் வழக்கறிஞர் ஆவார். இவர் மலையாளத்தில் சில தொடர்களிலும், படங்களிலும் நடித்திருக்கிறார். பின் இவர் அன்பே வா சீரியல் மூலம் தான் தமிழ் சின்னத்திரையில் அறிமுகம் ஆகியிருந்தார். அதோடு இந்த சீரியல் மூலம் தான் இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. தற்போது இவர் சீரியலில் இருந்து விலகுவது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில், டியர் அன்பே வா ஃபேமிலி, அன்பே வா தொடரிலிருந்து விடைபெறும்போது ஆழ்ந்த உணர்ச்சிகளாலும், நன்றியினாலும் என் இதயம் நிரம்பி வழிகிறது.

-விளம்பரம்-

டெல்னா பதிவு:

இது வெறும் குட் பை மட்டுமல்ல உங்களுடைய அன்பிற்கும், நீங்கள் கொடுத்த அத்தனை நினைவுகளுக்கும் நன்றி! என்னுடைய வாழ்க்கையின் ஒரு அத்தியாயமாக வாழ்நாள் முழுவதும் அன்பே வா கொடுத்த அழகான நினைவுகள் இருக்கும். `வருமிகா’ ரசிகர்களுக்கு, உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். உங்களுடைய அன்பு இந்தப் பயணத்தை மறக்க முடியாததாக ஆக்கியிருக்கிறது. புரொடக்‌ஷன் ஹவுஸ் சரிகம தமிழுக்கும், சன் டிவிக்கும் என்னுடைய நன்றி! என்னுடைய திறமையை வெளிக்கொண்டு வர எனக்கொரு பிளாட்ஃபார்ம் உருவாக்கிக் கொடுத்தீர்கள்.

சீரியலில் டெல்னா விலக காரணம்:

இந்த புராஜெக்ட்டில் நானும் ஒரு பார்ட் ஆக இருந்ததைப் பெருமையாக நினைக்கிறேன். நினைவுகளுக்கு நன்றி! தொடர்ந்து உங்களது ஆதரவை `அன்பே வா’விற்குக் கொடுங்கள்! சைனிங் ஆஃப் பூமிகா!’ என்று கூறி இருக்கிறார். தற்போது இவரின் பதிவு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இவருக்கு திருமணம் நடைபெற இருப்பதால் தான் சீரியலில் இருந்து டெல்னா விலக இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement