ஆளுக்கு இவ்ளோ ரூபா, மதுரை மாநாட்டின் பட்ஜெட் எவ்ளோ தெரியுமா ? -TTV தினகரன்.

0
608
- Advertisement -

நேற்று மாலை திருச்சியில் நடைபெற்ற ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட அமமுக செயல் வீரர்கள் கூட்டம் முடிவடைந்த பின் செய்தியாளர்களை சந்தித்தார் அமமுக பொது செயலாளர் டி.டி.வி. தினகரன். அதில் பேசிய அவர் அதிமுகவின் மாநாட்டிற்கு 250 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுளதாக அவர் கூறினார். ஒவ்வொரு நபருக்கும் 1000 ரூபாய் வரை கொடுத்து மாநாட்டிற்கு அழைத்து வர உள்ளனர் என்றும் அவர் கூறினார்.

-விளம்பரம்-

திமுக 2019ல் இருந்து காலகட்டம் வேற அந்த தேர்தல் வேற இந்த தேர்தலில்.அண்ணன் மாவீரர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் மக்கள் கொதிப்படைந்து அவங்களுடைய தவறான ஆட்சி முறையாளர் மக்கள் எதிர்ப்பு  உணர்வை காட்டுவதற்காக தான் 2019 தேர்தலில் திமுக வாக்களித்தவர்கள். இதுபோல 2021ல அதே போல தான் நடந்தது. ஆனால் இந்த இரண்டரை ஆண்டுகளில் பழனிச்சாமியும் தாண்டி அவர் அண்ணனை போல ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். இதனால் தமிழ்நாட்டு மக்களின் கோபத்திற்கு ஸ்டாலின் ஆளாகியுள்ளார்.

- Advertisement -

வருகின்ற பாரளுமன்ற தேர்தல் 2026 ஆம் ஆண்டு வருகின்ற சட்டமன்ற தேர்தல்  திமுகவை எதிர்த்து மக்கள் வாக்களிக்கின்ற தேர்தல் அதில் உறுதியாக தமிழ்நாட்டு மக்கள் திமுகவிற்கும் பழனிச்சாமிக்கு மாற்றாக ஆமமுகவை தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் பயணிக்கிறோம். ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் ஒரே கடிதத்தின் நீட்டை விளக்குவோம் என்று சொன்னார்கள். ஒரு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு. இந்த தீர்ப்பு தான் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது மக்களை ஏமாற்றமாகவே திமுக என்று தேர்தல் வாக்கு உறுதியளித்தார்கள். 

2021 அன்று எந்த வாக்குறுதி அளிக்காமல் இருந்தாலும் மக்கள் அவர்களுக்கு வாய்ப்பளித்திருப்பார்கள். திமுகவின் குணாதிசயமே மக்களை ஏமாற்றுவது தான். ஆட்சியின் பொறுப்பாளர் வருவதற்காக எந்தவித தவறான  நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். அதுபோல இந்த முறையும் திமுக திருந்தாத தீய சக்தி என்று உறுதிப்படுத்தி உள்ளனர். கர்நாடகா மேக அணையை கட்டுவதற்கு எதிர்ப்பாக அமமுக தான் முதல் முதலில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சியில் செய்வது. எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் கர்நாடகாவிற்கு தைரியம் வந்துவிடும்.

-விளம்பரம்-

தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்க பார்ப்பார்கள் ஆனால் மத்திய அரசு அதில் உறுதியாக தமிழ்நாட்டு மக்களின்  பெற்றுத் தர வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை. மேலும் அதிமுகவின் மாநாட்டைப் பற்றிய பேசினார். அவர்கள் கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளில் ஆட்சியில் ஈட்டிய செல்வத்தை எல்லாம் மக்களை. அள்ளி செல்லாம் என்று பார்கிறார்கள்.  அவர்கள் சொல்வது போல 20 லட்சம் பேர் 25 லட்சம் பேர் என்று கணக்குப் பார்த்தால் எப்படியோ 250 கோடி செலவு செய்து இருப்பார்கள்.  ஒரு பகுதி ஒவ்வொரு பகுதியிலும் தலைக்கு 1000  ரூபாய் வரை தந்து இருக்கிறார்கள்.

 

எடப்பாடி பழனிச்சாமி அம்மாவின் கட்சியை கபளீகரம் செய்துள்ளார். அது ஜனநாயக ரீதியாக மீட்டெடுப்பதற்காக 2017 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட  அம்மாவின்  உண்மையான தொண்டர்களை வைத்து உருவாக்கபட்டது தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். வந்து நாங்கள் நம்பிக்கை உடன் உறுதியாக அம்மாவின் இயக்கத்தை வருங்காலத்தில் ஜனநாயகம் அடிப்படையில் மீட்டெடுப்போம். 2026 தேர்தலில் அம்மாவின் உண்மையான தொண்டர்களை வைத்து திமுகவை எதிர்போம்” என்று அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார்.      

Advertisement