40 வருசமா அரசியல்ல இருக்குறவங்க மத்தியில் நேத்து கட்சி ஆரம்பிச்ச ஒருத்தன் – TVK தலைவரை விமர்சித்த TVK தலைவர்.

0
525
- Advertisement -

சமீப காலமாக விஜயின் அரசியல் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வந்துகொண்டு இருக்கிறது. சமீபத்தில் தான் நடிகர் விஜய் தனது புதிய அரசியல் கட்சி குறித்து அறிவித்து இருந்தார். விஜய் தன்னுடைய கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என்று பெயர் வைத்திருக்கிறார். இந்த பெயரை விஜய் அறிவித்ததில் இருந்து விஜயின் மன்ற உறுப்பினர்கள், ரசிகர்கள் என பலருமே உற்சாகத்தில் இருக்கிறார்கள். அதோடு 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடவில்லை.

-விளம்பரம்-

2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தயாராகுவோம் என்று விஜய் சொல்லியிருக்கிறார். முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட இருப்பதால் சினிமாவிலிருந்து விலகுவதாகுவதாகவும் அறிவித்து இருக்கிறார். விஜய்யின் புதிய கட்சிக்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும் சினிமா பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். சமீபத்தில் தான் தனது கட்சியின் செயலி ஒன்றை அறிமுகம் செய்தார்.

- Advertisement -

இந்த செயலி மூலம் தற்போது வரை 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளதாக தகவல் வெளியானது. இப்படி ஒரு நிலையில் கூத்தாடிகளை நம்பி இளைஞர்கள் செல்லக் கூடாது என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேலுமுருகன் பேசி இருக்கிறார். சமீபத்தில் இதுகுறித்து பேசியுள்ள அவர் ‘நேற்று கட்சி ஆரம்பித்த ஒரு கதாநாயகன் திடீரென்று உறுப்பினர்களை சேர்க்க ஏதோ ஆரம்பித்து இருக்கிறாராம். அந்த கட்சியின் பெயர் கூட எனக்கு தெரியவில்லை.

உறுப்பினர் சேர்க்கை நடந்து வரும் நிலையில் அவரது இணையதளம் முடங்கிவிட்டதது, 50 லட்சம் பேர் உறுப்பினர்கள் சேர்ந்துட்டாங்கன்னு பெரிய பெரிய ஊடகத்தில் எல்லாம் செய்தி வெளியிடுகிறார்கள். ஏண்டா 40 ஆண்டு காலம் பொது வாழ்விற்கு அர்ப்பணித்து இங்கே அமர்ந்திருக்கும் மணியரசன் திருமாவளவன் அண்ணன் தியாகு போன்றவர்கள் தூக்குக் கயிறு வரை மொத்த விட்டு இந்த தமிழ் சமூகத்திற்காக ஒரு ஒரு டீயும் பண்ணையும் சாப்பிட்டு விட்டு இந்த தமிழ் சமூகத்திற்காக போராடி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

இவர்களை போன்றவர்களை இந்த இளைய தமிழ் சமூகம் தூக்கி எரிந்துவிட்டு கூத்தாடிகளை கொண்டாடுகின்ற இந்த நிலை உடைபட வேண்டும். நான் பேசி சென்று விட்ட பிறகு விஜய் ரசிகர்கள் என்னை கல்லால் அடிக்கக்கூடும். அவர்கள் எல்லாம் ரசிகர்கள் அதனால் அப்படி நடந்து கொள்ளக் கூடும். அவர்களுக்கு யார் தியாகு, யார் பாவா என்றெல்லாம் தெரியாது என்று பேசி இருக்கிறார்.

ஏற்கனவே விஜய்யின் கட்சி பெயர் குறித்து எதிர்ப்பு தெரிவித்து இருந்த வேல்முருகன் புதிய கட்சியை தொடங்கியுள்ள விஜய்க்கு தனது வாழ்த்துக்களை கூறியதோடு, தமிழக வாழ்வுரிமை கட்சி என்ற எங்களது கட்சிப் பெயரின் ஆங்கில சுருக்கம் TVK தான் என்றும் கூறி இருந்தார். இதுகுறித்து பேசி இருந்த அவர் ‘நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் சுருக்கமாக TVK என்று பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்று தேர்தல் ஆணையத்தை முறையிடுவோம். தமிழக வாழ்வுரிமைக் கட்சியை TVK என்று தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து, தேர்தலிலும் போட்டியிட்டு வருகிறோம். விஜய் கட்சியும் TVK என்று அனுமதித்தால் மக்களிடையே குழப்பம் ஏற்படும்’ என்று கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement