டான், ET, பீஸ்ட், அண்ணாத்த,விக்ரம் என்று தான் வெளியிட்ட மொத்த படங்களின் வசூல் குறித்து பேசிய உதயநிதி – இதோ வீடியோ.

0
406
- Advertisement -

அண்ணாத்த படம் குறித்து உதயநிதி ஸ்டாலின் அளித்திருக்கும் பதில் தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. சமீபத்தில் உதயநிதி நடிப்பில் வெளியாகியிருந்த படம் நெஞ்சுக்கு நீதி. இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் தான்யா ரவிச்சந்திரன், சிவானி ராஜசேகர், சுரேஷ் சக்ரவர்த்தி உட்பட பலர் நடித்து இருந்தார்கள். மேலும், படத்தில் முதன்முறையாக காவல் அதிகாரியாக உதயநிதி நடித்திருந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. நெஞ்சுக்கு நீதி படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் என்ற படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார்.

- Advertisement -

கலகத் தலைவன் படம்:

இதனை அடுத்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் கலகத் தலைவன். இந்த படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்து இருக்கிறார். இவர்களுடன் படத்தில் ஆரவ், கலையரசன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். பிசாசு படத்தின் இசை அமைப்பாளர் அரோல் கரோலி இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தில்ராஜ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கிறது.

உதயநிதி பேட்டி:

பல எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவரிடம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலம் வெளியிட்ட படங்களின் பிளாக்பஸ்டர் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்கள். அதற்கு உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பது, சூர்யாவின் எதற்கு துணிந்தவன் படம் வசூல் ரீதியாக பிளாக்பஸ்டர்.

-விளம்பரம்-

பிளாக் பஸ்டர் படங்கள்:

விஜயின் பீஸ்ட் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி படம். ஆனால், கதை பெட்டராக இருந்திருக்கலாம். சிவகார்த்திகேயன் டான் சூப்பர் ஹிட். சிவகார்த்திகேயன் படங்களிலேயே பெஸ்ட் கலெக்சன் டான். விக்ரம் நடித்த கோப்ரா படம் ஒன்னும் இல்லை. கமல் நடித்த விக்ரம் படம் ஊருக்கே தெரியும். மெகா பிளாக்பஸ்டர். லவ் டுடே படம் பிளாக் பஸ்டர். இந்த படத்தின் பட்ஜெட் ஐந்தரை கோடி தான். ஆனால், 18 லிருந்து 20 கோடி கலெக்ட் பண்ணி இருக்கிறது. மிகப்பெரிய ஹிட் கொடுத்திருக்கிறது.

அண்ணாத்த படம் குறித்து சொன்னது:

சிம்புவின் வெந்து தணிந்தது காடு பிளாக்பஸ்டர் தான். ரஜினி நடித்த அண்ணாத்த படம் வசூல் ரீதியாக இன்னும் கொஞ்சம் பெட்டராக பண்ணி இருக்கலாம். பெட்டராக எடுத்திருக்கலாம். ஆனால், நான் இன்னும் படம் பார்க்கவே இல்லை என்று கூறியிருக்கிறார். இப்படி ரஜினி படம் குறித்து உதயநிதி கூறி இருக்கும் கருத்து சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement