விஜய்யின் துப்பாக்கி படத்தில் இடம் பெறாத மிரட்டலான காட்சி. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.

0
17772
Thuppakki

தமிழ் சினிமா உலகில் உள்ள உச்ச நட்சத்திரங்களில் தளபதி விஜய்யும் ஒருவர். இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “மாஸ்டர்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் வேலைகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இந்த படத்தில் இவர்களுடன் மாளவிகா மோகன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், மேத்யூ ப்ரேம், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் படத்தை பிரிட்டோ தயாரித்து வருகிறது. இந்த படம் ஏப்ரல் மாதம் திரையரங்கில் வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஜய் அவர்களின் நடிப்பில் வெளிவந்த துப்பாக்கி படத்தில் இடம் பெறாத ஒரு காட்சி புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. 2012 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த படம் துப்பாக்கி.

- Advertisement -

இந்த படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டது. இப்படத்தில் விஜய்யுடன் காஜல் அகர்வால், வித்யூத் ஜம்வால், சத்யன், மனோபாலா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து இருந்தார்கள். ஏ ஆர் முருகதாஸும், விஜய்யும் இணைப்பில் வெளிவந்த முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரித்து இருந்தார்கள். இந்த படத்தை பல முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாத அளவிற்கு இருந்தது. அதிலும் இந்த படத்தில் இடம் பெற்ற 12 கன் சூட் அவுட், ஐ அம் வெயிட்டிங், கிளைமாக்ஸ் காட்சிகள் என்று பல காட்சிகள் மக்கள் மனதில் நீங்காமல் இடம் பிடித்திருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தில் யாரும் இதுவரை பார்த்திராத காட்சி ஒன்றின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. அது இப்படத்தில் இரண்டாம் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் விஜய்யின் துப்பாக்கி காட்டி மிரட்டுவது போல் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் படத்தில் இடம்பெறவில்லை. தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. இது குறித்து ரசிகர்கள் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த காட்சி படத்தில் இருந்தால் சூப்பராக இருந்திருக்கும் என்றும் சிலர் வருத்தப்பட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement