தல அஜித், யோகி பாபுவை தொடாதே என்று நிஜமாகவே சொன்னாரா என்னும் சர்ச்சைக்கு பிரபல எழுத்தாளர் வி.கே.சுந்தர் தற்போது முற்று புள்ளி வைத்துள்ளார். கடந்த சில தினங்களாகவே நடிகர் யோகி பாபு- வலைப்பேச்சு குழுவினர் இடையே நடக்கும் சர்ச்சை தான் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, நடிகர் யோகி பாபு, பிரபல வலைப்பேச்சு குழுவினர் தன்னிடம் நல்ல விமர்சனங்கள் செய்வதற்கு பணம் கேட்டதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

அதற்கு, வலைப்பேச்சு குழுவினர் யோகி பாபு இல்லாத ஒரு விஷயத்தை இருப்பதைப் போல் எதார்த்தமாக பேசியிருக்கிறார். சினிமா கோபுரத்தில் எவ்வளவு பேர் பிரபலமாக இருக்கிறார்கள். சில சமயம் சினிமா கோபுரத்தில் குப்பைகளுமே ஒட்டிக் கொள்ளும். அப்படி தான் யோகி பாபுகும் ஒரு குப்பை. அதே போல் ஒரு முறை பிரபல நடிகரின் கையை யோகி பாபு பிடித்ததற்கு என்னை தொடக்கூடாது என்று ஒதுங்கி தள்ளிப்போனதாக தங்களிடம் ஒருமுறை யோகி பாபு சொல்லி இருக்கிறார். அது வேறு யாருமில்லை அஜித் தான் என்று கூறி சர்ச்சையை கிளப்பியிருந்தார்கள்.
யோகி பாபு பகிர்ந்த புகைப்படம்:
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், யோகி பாபு தான் ஏற்கனவே அளித்த பேட்டியில், அஜித் வீரம் படத்தில் ஒரு காட்சியில் எல்லோருக்கும் சாப்பாடு போட்டு அடிப்பார். அந்த காட்சியில் நடிக்க என்னை கேட்டார்கள். உடனே நான், அவர் எனக்கு சாப்பாடு போடவில்லை என்றாலும் நடிக்கிறேன் என்று சொல்லிப் போனேன். காட்சி எல்லாம் எடுத்து முடித்துவிட்டு அஜித் என்னை கட்டிப்பிடித்து பாராட்டி இருந்தார் என்று கூறியிருந்த பேட்டியை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து இருந்தார். மேலும், பிடித்த புகைப்படம் என்று நடிகர் அஜித் தன்னை போட்டோ எடுப்பது போல் உள்ள புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, வலைப்பேச்சு குழுவினருக்கு யோகி பாபு பதிலடி கொடுத்திருந்தார்.
https://www.youtube.com/watch?v=k92moijv17U
வி.கே.சுந்தர் பேட்டி:
தற்போது இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பிரபல எழுத்தாளர் வி.கே.சுந்தர் ஒரு பேட்டியில், தல அஜித் யோகி பாபுவை தொடாதே என்று சொன்னார் என்பது தவறான ஒரு கருத்து. எப்பவுமே சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆக முடியவில்லை என்றால், நடிகர் அஜித் குறித்து பேசினால் ட்ரெண்டிங் ஆகிவிடலாம். அதற்கான முயற்சிகளில் தான் சோசியல் மீடியாவில் இருக்கிறவங்க முயற்சிக்கிறாங்கன்னு நான் நினைக்கிறேன். சினிமாவில் நான் எல்லா நடிகர்களோடும் நெருக்கமாக பழகி இருக்கிறேன். எல்லா நடிகர்களுக்கும் நல்ல குணங்கள் இருக்கும். ஆனால் அவர்களை எல்லாம் தாண்டி அஜித் கிட்ட ஒரு பிளஸ் இருக்கு.
அஜித் நல்ல மனிதன்:
அது என்னவென்றால் ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் ஒக்காந்துட்டு இருக்கும்போது, அவர் கூட நடிக்கிற ஆர்டிஸ்ட் எல்லாம் தூரமா இருந்து அவரைப் பார்ப்பார்கள். அவர்களுக்கு அஜித் கிட்ட போலாமா வேண்டாமா என்ற குழப்பம் இருக்கும். அவர்களை அஜித் பார்த்து விட்டார் என்றால், வரச் சொல்லி அருகில் அமர வைப்பார். அவர்களிடம் நன்றாக பேசுவார். அவர்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமென்றாலும் செய்வார். இந்த மாதிரி அவர் பற்றிய தவறான செய்தி வந்த உடனே, அவருடைய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் நிறைய உலாவிகின்றன. மேலும் நடிகர் அஜித்திற்கு போட்டோகிராபில் ரொம்ப இன்ட்ரஸ்ட் இருக்கிறது.

ட்ரெண்டிங் ஆக செய்கிறார்கள்:
சமீபகாலமாக, எல்லா நடிகர்களுக்கும், உதாரணமாக அப்பு குட்டிக்கு கூட அவரே காஸ்ட்யூம் செலக்ட் பண்ணி போட்டோ எடுத்து இருக்காரு. அந்த மாதிரி யோகி பாபுக்கும் எடுத்து கொடுத்திருக்காரு. இந்த பிரச்சனையில் கூட, தனது எக்ஸ் தளத்தில் 'என் வாழ்நாளில் எனக்கு பிடித்த புகைப்படம்' என்று யோகி பாபு பகிர்ந்திருக்கிறார். அந்தப் புகைப்படத்தில் கூட யோகி பாபு மற்றும் மொட்டை ராஜேந்திரன் ஒக்காந்துட்டு இருப்பாங்க. அவர்களை அஜித் போட்டோ எடுத்துட்டு இருப்பார். இந்த நிகழ்வே வலைப்பேச்சு கோஷ்டி சொல்வது பொய் என நிரூபிக்கிறது.கன்டென்ட் இல்லை என்பதற்காக இவர்கள் செய்ற வேலைதான் அது. அஜித் ஒருபோதும் அது மாதிரி நடந்துக்க மாட்டாரு என்று கூறியுள்ளார்.






