தில்லுக்கு துட்டு வரிசையில் சதீஸ் நடித்த கான்ஜூரிங் கண்ணப்பன் எப்படி? முழு விமர்சனம் இதோ

0
787
- Advertisement -

அறிமுகம் இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கான்ஜூரிங் கண்ணப்பன். இந்த படத்தில் சதீஷ் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் ரெஜினா, சரண்யா பொன்வண்ணன், வி டிவி கணேஷ், ஆனந்தராஜ், நாசர், ரெடின் கிங்ஸ்லி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. யுவன் இசையமைத்து இருக்கிறார். இன்று வெளியாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் ஹீரோ சதீஷ் விளையாட்டுத்துறையில் வேலை தேடி கொண்டிருக்கிறார். அப்போது ஒரு நாள் தெரியாமல் சூனியம் செய்து வைத்திருக்கும் Dream catcher-ல் இருந்து இறகு ஒன்றை எரித்து விடுகிறார். இதனால் இவர் எப்போதெல்லாம் தூங்குகிறாரோ அப்போதெல்லாம் ஒரு கனவுலகத்தில் பேயிடம் சிக்கிக் கொள்கிறார். இந்த பிரச்சனையில் சதீஷ் மாட்டிக்கொண்டது மட்டுமில்லாமல் அவருடைய தாய், தந்தை, மாமா மற்றும் ஆனந்தராஜ் எல்லோருமே Dream catcher-ல் இருந்து இறக்கையை பிடுங்கி கனவுலகத்தில் சிக்கிக் கொள்கிறார்கள்.

- Advertisement -

இதனால் அவர்கள் அனைவரும் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? அதிலிருந்து தப்பித்தார்களா? இதன் பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் வழக்கமான நடிப்பை சதீஸ் கொடுத்திருக்கிறார். ஆனால், சில இடங்களில் அவருடைய நகைச்சுவை ஒர்க் அவுட் ஆகவில்லை. சீரியஸான இடங்களில் இவர் சிறப்பாக நடித்திருக்கிறார். இவரை அடுத்து வரும் சரண்யா, ஆனந்தராஜ் ஆகியோர் தன்னுடைய அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

படம் குறித்த தகவல்:

அதேபோல் காமெடியில் ரெடின் நன்றாக செய்திருக்கிறார். வி டிவி கணேஷ், நமோ நாராயணன், நாசர், ரெஜினா ஆகியோர் தங்களுக்கு கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள் தவிர மற்றபடி படத்தில் அவர்களுக்கு பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு கதாபாத்திரம் இல்லை. அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் எடுத்த கதை வழக்கமான பேய் கதை. இருந்தாலும், கொஞ்சம் வித்தியாசமான கதைக்களத்தை கொடுத்திருக்கிறார். ஆனால், முதல் பாதி விறுவிறுப்பாக சென்றது.

-விளம்பரம்-

இரண்டாம் பாதியில் ஒன்றும் இல்லை. காரணம், பேய் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு அடுத்து என்ன என்று சுவாரஸ்யம் தான் ஏற்படனும். இங்கு அடுத்து என்ன என்று ரசிகர்கள் யூகிக்க கூடிய அளவில் இருக்கிறது. ஒரு படத்தில் நகைச்சுவை ஒர்க் அவுட் ஆகி இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால், சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிதாக நகைச்சுவை இல்லை. யுவன் சங்கர் ராஜா உடைய பின்னணி இசை ஓகே, ஒளிப்பதிவு எடிட்டி ஓகே. மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஒரு சுவாரஸ்யமும், பயமூட்டும் காட்சிகளும் இல்லை. மொத்தத்தில் ஒரு மொக்கையான படமாக இருக்கிறது.

நிறை:

கதை கரு ஓகே

sfx ஓகே

பின்னணி இசை ஓகே

சரண்யா பொன்வண்ணன், ஆனந்தராஜ் நடிப்பு சிறப்பு

குறை:

வழக்கமான பேய் கதை

நகைச்சுவை ஒர்க் அவுட் ஆகவில்லை

நிறைய யூகிக்கக்கூடிய காட்சிகள்

சதீஷ் நடிப்பில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்

சில கதாபாத்திரங்கள் படத்திற்கு தேவையே இல்லை

மொத்தத்தில் கான்ஜூரிங் கண்ணப்பன்- ஏமாற்றம்

Advertisement