வாழை படத்தில் நடித்த சிறுவர்களாக பொன்வேல் மற்றும் ராகுலின் முதல் பேட்டி தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், முழுக்க முழுக்க குழந்தைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் படம் தான் 'வாழை'. இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர், சிறுவர்களாக பொன்வேல் மற்றும் ராகுல் நடித்திருக்கிறார்கள். தனது வாழ்க்கையில் நடந்த தொழிற்சங்கத்துடன் சேர்த்து மிகப் பெரிய அரசியலையும் பேசி இருப்பின் படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தில் சிறுவர்களாக நடித்த பொன் வேல் (சிவனைந்தன்) மற்றும் ராகுல் (சேகர்) பேட்டி அளித்திருக்கிறார்கள். முதலில் பேசிய பொன் வேல், என் பெயர் பொன்வேல், சேகரா நடிச்சவங்க பெயர் ராகுல். எனக்கு இப்போ ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. சினிமாவில் எல்லாம் நான் நடிப்பேன் என்று நினைத்துக்கூட பார்ப்பதில்லை. என் வாழ்க்கையே மாறினது போல் இருக்கிறது. இதுக்கு எல்லாமே காரணம் மாரி சார் தான். ஏனென்றால், நானும் மாரி சார் வாழ்க்கையை தான் வாழ்ந்துகிட்டு இருந்தேன். சனி ஞாயிறுகளில் நண்பர்களுடன் சேர்ந்து காய் சுமக்க போவோம். ஒரு நாள் எங்க ஊரில், ஏதோ படம் எடுக்குறாங்கன்னு சொன்னாங்க. நானும் ராகுலும் விளையாடிட்டு இருந்தோம்.
ஆடிஷன் குறித்து:
அப்போ எங்களை ஆடிஷனுக்கு கூப்பிட்டாங்க. அங்க அசிஸ்டன்ட் டைரக்டர் முத்து அண்ணன், அழுகிற மாதிரி நடித்துக் காட்ட சொன்னார். அது ரொம்ப கஷ்டமா இருந்ததுனால ரெண்டாவது நாள் போக வேண்டாம் என்று முடிவு பண்ணிட்டோம். அப்புறம் ஒருநாள், பக்கத்து தெருவுல படம் எடுத்துட்டு இருந்தாங்க. சும்மா பார்க்கலாம்னு போனோம். அப்போ அசிஸ்டன்ட் டைரக்டர் வள்ளி அண்ணன் ஒரு சீன் கொடுத்து நடிக்க சொன்னார். நாங்க நடிச்சதை அவங்க மாரி சாருக்கு அனுப்பிச்சு வைப்பாங்க. ஒருநாள் மாரிசாரே நேரில் வந்தார். அப்புறம் கிளைமாக்ஸ்ல வாழைத்தாரில், அடிவாங்குற மாதிரி சீன் நடிக்க சொன்னாங்க.
https://www.youtube.com/watch?v=psHSvX6EGGY
மாரி சார் ஓகே சொல்லிட்டார் :
ராகுல் பேசியது :
அப்போ எங்களுக்கும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா? என்று நினைத்திருக்கிறோம். அந்த வாய்ப்பு வாழை படம் மூலம் எங்களுக்கு கிடைத்திருக்கிறது. அதே மாதிரி படத்தில் நடித்த எல்லாரும் எங்ககிட்ட நன்றாக பழகினார்கள். சின்ன வயசுல இருந்து காய் தூக்குறது, எங்களுக்கு பழகிடுச்சு. அதுக்கூட ஆக்டிங் சேர்ந்து பண்ணனும் என்பது தான் கொஞ்சம் புதுசாக இருந்தது. அப்புறம் மாரி சார் தான் ஆக்டிங் எங்களுக்கு நல்லா சொல்லிக் கொடுத்தார். நாங்க எப்பவும் லீவில் காய் சுமக்க தான் போவோம். அதில் வரும் பணத்தை வைத்து எங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்வோம்.

வாழை எங்கள் முதல் படி :
வாழை படம் பண்ணாமல் இருந்திருந்தால், நாங்களும் கடைசி வரைக்கும் காய் சுமக்கும் வேலையை தான் செய்திருப்போம். ஒரு சின்ன ஊரில் இருந்து இப்போ பெரிய டைரக்டரா வளர்ந்து, அதே ஊருக்கு திரும்ப வந்து எங்களை நடிக்க வைத்திருக்கிறார். அதே மாதிரி, நாங்களும் பெரிய ஆட்கள் ஆனால், இதே ஊரில் இருந்து நாலு பேரை நாங்க நடிக்க கூப்பிட்டுபோம். இந்த படம் பண்றதுக்கு முன்னாடி வாழை என்றால் நாங்க பட்ட கஷ்டங்கள் தான் ஞாபகத்துக்கு வரும், இதுக்கு அப்புறம் வாழை என்றால் மாரி சார் தான் எங்களுக்கு ஞாபகம் வருவாரு.. ஏனென்றால், அவர் தான் நாங்கள் சினிமாவில் முதல் அடி எடுத்து வைக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார் என்று கூறியிருக்கிறார்கள்.






