எல்லாருக்கும் ஓடி போய் உழைச்ச சேஷு மாமாவோடு உயிர் இத்தனை லட்சம் இல்லாம போய்டுச்சுன்னு தான் கஷ்டமா இருக்கு – இயக்குனர் உருக்கம்.

0
314
- Advertisement -

நடிகர் சேசு இறப்பு குறித்து இயக்குனர் கார்த்திக் யோகி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. லொள்ளு சபா மூலம் பிரபலமான சேஷு பின்னர் பல்வேறு திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார். இறுதியாக ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் நடித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இப்படி ஒரு சிகிச்சை பலனின்றி கடந்த 26ஆம் தேதி காலமானார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் நடிகர் சேசுவின் மறைவு குறித்து வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் இயக்குனர் கார்த்தி யோகி அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார்.அதில் அவர், ரொம்ப நல்ல மனிதர். வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் பரதநாட்டியம் சீன் எடுக்கும்போது அவருக்கு 45 வயது தான் இருக்கும் என்று நினைத்தேன். பின் பரதநாட்டியம் ஆடுறீங்களா? என்று கேட்டேன். அதுக்கு அவர், ஆடிட்டா போச்சு என்று அசால்டா சொல்லி ஆடினார்.

- Advertisement -

ஆனால், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் போது தான் அவருக்கு 60 வயது என்று எனக்கு தெரிந்தது. சேசு அண்ணாவுக்கு காமெடி சென்ஸ் ரொம்பவே அதிகம். அவர் பேசுற டயலாக் எல்லாமே காமெடியாக இருக்கும். மற்ற காமெடி நடிகர்கள் ஒரு வரியில் பன்ச் மாதிரி சொல்வார்கள். ஆனால், சேசு எல்லாம் பாடி லாங்குவேஜ் மூலம் காமெடி பண்ணி அசத்துவார்.அவருடைய பலம் என்னவென்று சந்தானம் சாருக்கு நன்றாகவே தெரியும்.

காரணம், அவர்கள் இரண்டு பேருமே ஆரம்ப காலத்தில் இருந்தே நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். எல்லா படத்திலேயும் பூசாரி, ஐயர் கதாபாத்திரமே நடிக்கிறேன். போலீஸ் கதாபாத்திரம் கொடு என்று சொன்னார். நான் என்னுடைய அடுத்த படத்தில் கண்டிப்பாக வாய்ப்பு தருகிறேன் என்று சொன்னேன். ஆனால், இப்போது அவர் இல்லை. அவருக்காகவே ஒரு கதாபாத்திரத்தையும் உருவாக்கி வைத்திருக்கிறேன். மேலும், மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பு எனக்கு சேசு மெசேஜ் பண்ணி இருந்தார்.

-விளம்பரம்-

பரதநாட்டியம் வீடியோ ஒரு மில்லியன் போய்விட்டது. செம வைரல் ஆகிடுச்சு சந்தோசமாக இருக்கு என்று சொன்னார். உடனே நான் அதை ரிபோர்ட் பண்ணி டெலிட் பண்ண சொல்கிறேன் என்று சொன்னேன். உடனே அவர், அதெல்லாம் பண்ணிடாதீங்க, நமக்கு ரீச் ஆனா சரி தான் என்ன சொன்னார். அந்த மெசேஜை நான் என்னுடைய மொபைலில் இன்னும் அப்படியே வைத்திருக்கிறேன். தமிழ் சினிமா ஒரு சிறந்த காமெடி நடிகரை இழந்திருக்கிறது.

இப்படி எல்லாருக்கும் ஒரு பிரச்னைன்னா ஓடிப்போய் பார்த்தவருக்கு, ஒரு பிரச்னை வந்தப்போ அவருக்குத் தேவையான உதவி கிடைக்கலையேனு நினைக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு. 10 லட்ச ரூபாய் இல்லாமல் சேஷூ மாமா உயிர் போயிடுச்சுனு நினைக்கும் போது வேதனையாக இருக்கு. அவருக்குப் பழக்கமான பெரிய, பெரிய நடிகர்கள் உதவியிருந்தால், அவரோட உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும். நடிகர் சங்கமும் இந்த மாதிரி ஒரு நடிகர் பண உதவி இல்லாமல் இருக்கார்னு தெரிஞ்சு அவருக்கு உதவி செய்திருந்தாலும் இன்னைக்கு அவரை காப்பாற்றி இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

Advertisement