தமிழ் சினிமா உலகில் நகைச்சுவையில் ஜாம்பவனாக திகழ்பவர் வடிவேலு. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் பின்னணி பாடகரும் ஆவார். 1988ஆம் ஆண்டு டி ராஜேந்தர் இயக்கிய திரைப்படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது.
மேலும், இவர் தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித், சத்யராஜ், பிரபு, விக்ரம் என அனைத்து முன்னணி நடிகர்களின் படத்திலும் நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் ஒவ்வொரு படத்திலும் இவருடைய கதாபாத்திரம் என்றென்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. மேலும், இவர் காமெடி நடிகராக மட்டும் இல்லாமல் ஹீரோவாகவும் படங்களில் நடித்து இருக்கிறார். அதிலும், இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் வெற்றியை தொடர்ந்து 24ம் புலிகேசி படத்தை எடுக்க துவங்கினார் வடிவேலு.
வடிவேலு திரைப்பயணம்:
இந்த படத்தின் போது வடிவேலுக்கும், இயக்குனர் ஷங்கருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதன் காரணமாக தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவை படங்களில் நடிக்கக் கூடாது என உத்தரவு போட்டது. இதனால் பல வருடங்கள் வடிவேலு படங்களில் நடிக்காமல் இருந்தார். கடந்த ஆண்டு தான் இந்த பிரச்சனை தீர்ந்தது. தற்போது வடிவேலு படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்து இருந்தார்.
ஆனால், இந்த படம் பெரும் தோல்வியை தழுவி இருந்தது. இப்படி ரீ – என்ட்ரி கொடுத்த படம் தோல்வியடைந்ததை நினைத்து சோகத்தில் இருந்த வடிவேலுவிற்கு மாமன்னன் திரைப்படம் வடிவேலுவிற்கு ஒரு கம் பேக் படமாக அமைந்தது. தற்போது அடுத்தடுத்து படங்களால் மகிழ்ச்சியில் இருக்கும் வடிவேலுவிற்கு சோகத்தை ஏற்படுத்தும் விதமாக அவரது சகோதரர் காலமாகி இருக்கிறார்.
வடிவேலுவுடன் மொத்தம் பிறந்தவர்கள் 7 பேர். இதில் வடிவேலுவை தவிர வேறு யாரும் நல்ல நிலையில் இல்லை. இப்படி ஒரு நிலையில் வடிவேலுவின் உடன் பிறந்த தம்பி ஜெகதீஸ்வரன் சமீபத்தில் காலமாகி இருக்கிறார்.கடந்த ஜனவரி மாதம் தான் வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி (எ) பாப்பா உடல்நலக்குறைவால் காலமாகி இருந்தார். தனது தாயாரின் இறப்பு குறித்து பேசிய வடிவேலு உடல்நிலை சரியில்லாமல் இருந்து.
என் அம்மா தெம்மாங்கு தான் இருந்தார்கள் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்தவுடன் மார்பு சளி காரணமாக திடீரென்று பல்ஸ் இறங்கி விட்டது. பொங்கலுக்காக தான் இங்கு ஊருக்கு வந்தேன். பொங்கல் முடியும் வரை யாரையும் அவர் தொந்தரவு செய்யவில்லை. மாடெல்லாம் புடிச்சுட்டு வாங்க அதுக்கப்புறம் தான் போவேன் என்று சொன்னார் எல்லாம் பண்டிகையையும் முடித்துவிட்டு யாருக்கும் தலை இல்லாமல் அந்த அம்மா சென்று விட்டாள்’ என்று கூறி இருந்தார்.