16 வயதில் திருமணம், கணவர் செய்த கொடுமை – வாய்ப்பு கேட்டு கண்ணீர் வடித்த வடிவேலு காமெடி நடிகை.

0
904
- Advertisement -

குடும்பத்தால் ஏமாற்றப்பட்டு கொடுமைகளை அனுபவித்த வடிவேலு பட நடிகை சுமதி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்கள் மத்தியில் அறியப்பட்டவர் நடிகை சுமதி. இவர் பெரும்பாலும் காமெடி கதாபாத்திரங்களில் தான் நடித்திருக்கிறார். குறிப்பாக இவர் வடிவேலுவுடன் இணைந்து நிறைய படங்களில் நடித்திருக்கிறார். இதுவரை இவர் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் தற்போது இவர் சகிலா நடத்தி வரும் தனியார் youtube சேனல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேட்டி அளித்து இருக்கிறார். அதில் அவர், நான் சினிமா உலகில் நுழைந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. பல வருடங்களாக நான் நடித்து வந்தாலும் சரியான அங்கீகாரம் எனக்கு கிடைக்கவில்லை. சினிமாவில் ஒரு சிலரால் ஒரு கட்டத்திற்கு மேல அடுத்த லெவலுக்கு செல்லவே முடியவில்லை.

- Advertisement -

நடிகை சுமதி அளித்த பேட்டி:

இத்தனை வருடங்களாக சினிமாவில் இருந்தும் எனக்கான சரியான வாய்ப்பு கிடைக்காததால் தற்போது பிழைப்புக்கே அல்லாடி கொண்டு இருக்கிறேன். வடிவேலுவுடன் நான் 20க்கு மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன்.இதனால் வடிவேலுவை சந்தித்து வாய்ப்பு கேட்க சென்றேன். ஆனால், வடிவேலுவின் மேலாளர் வடிவேலுவை சந்திக்க விடவில்லை. அவர் பிசியாக இருக்கிறார் என்று சொல்லி என்னை விரட்டி விட்டிருந்தார்கள். உண்மையில் வடிவேலு சார் ஷூட்டிங் ஸ்பாட்டில் நன்றாக தான் பேசுவார்.

கேரியரில் மட்டுமில்லாமல் நான் என்னுடைய சொந்த வாழ்க்கையிலும் தோற்றுப் போய்விட்டேன். எனக்கு 16 வயதிலேயே திருமணம் செய்து வைத்தார்கள். நான் என்னுடைய மாமாவை தான் திருமணம் செய்து கொண்டேன். திருமணத்திற்குப் பிறகு எப்போதுமே என்னுடைய மாமா குடித்துக் கொண்டே இருப்பார். மூன்று பிள்ளைகள் பிறந்தது. அதற்குப் பிறகும் அவர் குடித்துவிட்டு வந்து என்னை அடித்து கொடுமைப்படுத்துவார். எல்லாத்தையும் பொறுத்துக் கொண்டு தான் இருந்தேன். பின் அவர் என்னை வேறொருவன் உடன் தொடர்பு படுத்தி பேசினார்.

-விளம்பரம்-

குடும்பம் குறித்து சொன்னது:

ஒரு கட்டத்தில் இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் என்னுடைய கணவர் யாருடன் என்னை தொடர்பு வைத்து பேசினாரோ அவரிடமே சென்று என்னை எங்காவது கூட்டி போய்விடு என்றெல்லாம் கண்ணீருடன் அழுதேன். பின்னால் நான் அவருடன் என்னுடைய மூன்று பிள்ளைகளுடன் சென்னைக்கு வந்து புது வாழ்க்கையை தொடங்கினேன். அப்போதுதான் சினிமாவில் துணை நடிகையாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக அக்கம் பக்கத்தினர் சொன்னார்கள். இதனால் நானும் சினிமாவில் நடிக்கலாம் என்று ஆசைப்பட்டு படங்களில் கவனம் செலுத்தினேன். எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு என்னுடைய பிள்ளைகளை வளர்த்தேன். ஆனால், அவர்கள் வளர்ந்த பின்னர் என்னை விட்டுப் பிரிந்து சொந்த ஊருக்கு சென்று விட்டார்கள்.

உதவி செய்த நடிகர்கள்:

அவர்கள் ஒரு நாளும் என்னை பற்றி கவலைப்பட்டது கிடையாது. ஆனால், நான் சம்பாதித்து கொடுத்தால் மட்டும் எமோஷனலாக என்னிடம் பேசி அந்த பணத்தை வாங்கிக் கொள்வார்கள். என்னுடைய இரண்டாவது கணவர் தான் என்னை இப்போது வரை பார்த்துக் கொண்டிருக்கிறார். சமீப காலமாக எனக்கு பட வாய்ப்பு இல்லாததால் கஷ்டத்தில் இருக்கிறேன். கொரோனா நேரத்தில் கூட யோகி பாபு, சூரி, நரேன் போன்ற நடிகர்கள் எனக்கு பண உதவி செய்திருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் யோகி பாபு எப்போது பார்த்தாலும் எனக்கு பண உதவி செய்து கொண்டுதான் இருக்கிறார். எனக்கு பட வாய்ப்புகள் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று கண்ணீருடன் கூறி இருக்கிறார்.

Advertisement