சாதியை வலியுறுத்தி படங்கள் எடுக்கப்படுவதில்லை, அப்படி எடுத்தால் – நாங்குநேரி சம்பவம் குறித்து வைரமுத்து.

0
1603
Vairamuthu
- Advertisement -

நாங்குநேரி சம்பவம் குறித்து கவிஞர் வைரமுத்து அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த முனியாண்டி கூலி தொழில் செய்பவர். இவருக்கு 17 வயதில் சின்னத்துரை என்ற மகனும், 14 வயதில் ஒரு என்ற இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படிக்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பள்ளியில் மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் சின்னத்துரை கடந்த சில வாரமாக பள்ளிக்கு செல்லவில்லை.

-விளம்பரம்-

இதனால் பள்ளி நிர்வாகம் பெற்றோரை தொடர்பு கொண்டு கேட்டு இருக்கிறார்கள். இதனை அடுத்து பள்ளிக்கு சென்ற மாணவனை ஆசிரியர்கள் விசாரித்து இருக்கிறார்கள். அப்போது சில மாணவர்கள் தன்னை தாக்கி இருப்பதாக கூறியிருக்கிறார். பின் வீட்டில் தனியாக இருந்த அந்த மாணவனும், அவருடைய தங்கையும் மூன்று பேர் சேர்ந்த கும்பல் அரிவாளால் சாரா மாறியாக வெட்டிவிட்டு தப்பி ஓட்டியிருக்கிறார்கள். இதை அறிந்த அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவர்களை மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார்கள்.

- Advertisement -

நாங்குநேரி சம்பவம்:

இது தொடர்பாக நாங்குநேரி போலீசாருக்கு மக்கள் தகவல் கொடுத்து இருக்கிறார்கள். இதை கண்டித்து பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தார்கள். இதனை அடுத்து போலீசும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். படுகாயம் அடைந்த மாணவன் மற்றும் தங்கை இருவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின் போலீஸ் விசாரணையில், சின்னத்துரை மாணவன் படிக்கும் பள்ளியில் சில சீனியர் மாணவர்கள் அவரை தொந்தரவு செய்திருக்கிறார்கள். இது குறித்து அவர் பெற்றோரிடமும், தலைமை ஆசிரியர் குறித்து கூறி இருக்கிறார்.

போலீஸ் விசாரணை:

இதனால் ஆத்திரம் அடைந்த சீனியர்கள் அந்த மாணவனின் வீடு புகுந்து அரிவாளால் வெட்டி இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. இது சாதி பிரச்சனை காரணமாக நிகழ்ந்து இருக்கிறது என்று கூறப்படுகிறது. மேலும், இது குறித்து போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. தற்போது இரண்டு பள்ளி மாணவர்கள் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலருமே தலைவர்கள், தெரிவித்து வருகின்றார்கள்.

-விளம்பரம்-

வைரமுத்து பேட்டி:

இந்த நிலையில் இது குறித்து சென்னை பெசன்ட் நகரில் செய்தியாளர்களை சந்தித்து வைரமுத்து பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், நாட்டில் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை பார்க்கும்போது கவலையாக இருக்கிறது. பிஞ்சு மனதில் நஞ்சு கலக்கக்கூடாது. அடித்தட்டு மக்களின் மனதில் சாதி பாகுபாடுகளை விதைக்க கூடாது. கல்வி கூடங்கள் என்பதை ஜாதிகளை ஒழிக்க பிறந்த மனமருத்துவ நிலைகள் நிலையங்கள்.

சாதி குறித்து சொன்னது:

அந்த நிலையங்களிலேயே ஜாதி தலை தூக்கி கொண்டிருப்பதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. ஜாதி என்பதை ஒரு அடையாளம் என்ற அளவில் மட்டும் கருதினால் போதும். அதற்கு பெருமையாகவோ இழிவாகவோ சொல்ல வேண்டாம். ஜாதி என்ற மாய பிம்பத்தை கடந்து கல்வி, அறிவு, பகுத்தறிவு மற்றும் சமவாய்ப்பு தளங்களில் முன்னேற வேண்டும் என்று நான் அனைவருக்கும் கோரிக்கை வைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement