அப்படி என்றால் என்ன அர்த்தம்- கமலின் சந்தேகத்தை தீர்த்து வைத்த வைரமுத்து. சுவாரசிய பதிவு.

0
469
- Advertisement -

கமலஹாசனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை கவிஞர் வைரமுத்து தீர்த்து வைத்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. நிழல்கள் எனும் திரைப்படத்தில் பொன்மாலைப்பொழுது என்ற பாடலின் மூலம் தான் இவர் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் பாடல்களை எழுதி இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் இதுவரை 7000 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார். இப்படி புகழின் உச்சத்தில் இருந்த கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் மீது சாட்டி இருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதைத்தொடர்ந்து பல பெண்கள் கவிஞர் வைரமுத்து மீது செக்ஸ் புகார்களை அளித்து இருந்தார்கள். பிறகு வைரமுத்து குறித்து பல விமர்சனங்களை சின்மயி எழுப்பி இருந்தார். இருந்தாலும், பலர் வைரமுத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருந்தார்கள்.

- Advertisement -

வைரமுத்து குறித்த சர்ச்சை:

இன்னொரு பக்கம், பாடகி சின்மயி கூறும் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா? என்று சிலர் சந்தேகித்தும் இருக்கிறார்கள். ஆனால், இதை எல்லாம் வைரமுத்து கண்டு கொள்ளாமல் இருக்கிறார். சமீபத்தில் தான் கவிஞர் வைரமுத்து அவர்கள் தன்னுடைய 70 வது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார். தற்போது வைரமுத்து அவர்கள் ஏ.கோகுல் கிருஷ்ணா இயக்கத்தில் குஞ்சுமோன் தயாரிக்கும் ஜென்டில்மேன் 2 படத்திலும், பாலா இயக்கும் வணங்கான் படத்திலும் பாடல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

சோசியல் மீடியாவில் வைரமுத்து:

இது மட்டும் இல்லாமல் சில படங்களிலும் வைரமுத்து கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க வைரமுத்து எப்போதும் சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கிறார். அதில் அவர், சமூகப் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தும், தன்னுடைய அடுத்த படம் குறித்த அப்டேட்டுகள், திரை அனுபவங்கள் குறித்தும் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் கமலஹாசன் உடன் உரையாடிய ஒரு சிறு அனுபவத்தை தற்போது வைரமுத்து பதிவிட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

வைரமுத்து பதிவு:

அதில் அவர் ராஜபார்வை படத்தின் போது கமலுடன் பேசிய சம்பவத்தை தான் பகிர்ந்து இருக்கிறார். அந்த பதிவில், அந்தி மழை பொழிகிறது எழுதிக்கொண்டிருந்த நேரம். கமல்ஹாசனுக்கும் எனக்கும்
நேர்ந்த உரையாடல்.

‘சிப்பியில் தப்பிய நித்திலமே
நித்திலம் என்றால் என்ன?’ ‘முத்து’

‘புரியுமா?’

‘அறுபதுகளில் புரிந்தது
எண்பதுகளில் புரியாதா?’

‘அப்போதே வந்திருக்கிறதா;
எந்தப் பாட்டில்?’

‘எம்.ஜி.ஆர் பாட்டில்:
சின்ன இடையே சித்திரமே
சிரிக்கும் காதல் நித்திலமே’
(சிறிய சிந்தனைக்குப் பிறகு)
‘சரி சரி’
கண்ணதாசனும் எம்.ஜி.ஆரும்
தமிழைக் காப்பாற்றினார்கள் என்று கூறி இரண்டு பாடல்களின் வீடியோவையும் பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement