சாதியைக்கூட மன்னிக்கலாம் அதற்கு – நாங்குநேரி சம்பவம குறித்து மனம் திறந்த வைரமுத்து.

0
1375
Vairamuthu
- Advertisement -

நாங்குநேரி சம்பவம் குறித்து கவிஞர் வைரமுத்து பதிவிட்டு டீவ்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது தமிழகம் முழுவதும் நாங்குநேரி சம்பவம் குறித்து தான் பரபரப்பாக பேசிக்கொண்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த முனியாண்டி கூலி தொழில் செய்பவர். இவருக்கு 17 வயதில் சின்னத்துரை என்ற மகனும், 14 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படிக்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பள்ளியில் மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-

இதனால் சின்னத்துரை கடந்த சில வாரமாக பள்ளிக்கு செல்லவில்லை. இதனால் பள்ளி நிர்வாகம் பெற்றோரை தொடர்பு கொண்டு கேட்டு இருக்கிறார்கள். இதனை அடுத்து பள்ளிக்கு சென்ற சின்னத்துரையிடம் ஆசிரியர்கள் விசாரித்து இருக்கிறார்கள். அப்போது சில மாணவர்கள் தன்னை தாக்கி இருப்பதாக கூறியிருக்கிறார். பின் வீட்டில் தனியாக இருந்த அந்த மாணவனும், அவருடைய தங்கையும் மூன்று பேர் சேர்ந்த கும்பல் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து இருவரையும் அரிவாளால் சாரா மாறியாக வெட்டிவிட்டு தப்பி ஓட்டியிருக்கிறார்கள்.

- Advertisement -

நாங்குநேரி சம்பவம்:

இதை அறிந்த அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவர்களை மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார்கள். இது தொடர்பாக நாங்குநேரி போலீசாருக்கு மக்கள் தகவல் அளித்தும் போலீஸ் வரவில்லை. இதை கண்டித்து பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தார்கள். இதனை அடுத்து போலீசும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். படுகாயம் அடைந்த மாணவன் மற்றும் தங்கை இருவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீஸ் விசாரணை:

பின் போலீஸ் விசாரணையில், சின்னத்துரை மாணவன் படிக்கும் பள்ளியில் சில சீனியர் மாணவர்கள் அவரை தொந்தரவு செய்திருக்கிறார்கள்.இது குறித்து அவர் பெற்றோரிடமும், தலைமை ஆசிரியர் இடமும் கூறி இருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த சீனியர்கள் அந்த மாணவனின் வீடு புகுந்து அரிவாளால் வெட்டி இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. மேலும், இது குறித்து போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

-விளம்பரம்-

பிரபலங்கள் தெரிவிக்கும் கண்டனம்:

தற்போது இரண்டு பள்ளி மாணவர்கள் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலருமே கண்டனங்களை தெரிவித்து வருகின்றார்கள். அந்த வகையில் ஜிவி பிரகாஷ், மாரி செல்வராஜ், ரஞ்சித், மோகன் ஜி, கார்த்திக் சுப்புராஜ், சீனு, ராமசாமி போன்ற பல பிரபலங்கள் இது குறித்து கண்டனங்களை தெரிவித்து பதிவிட்டிருந்தார்கள்.

வைரமுத்து பதிவு:

இந்நிலையில் இது தொடர்பாக பாடலாசிரியர் வைரமுத்து பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர்.” நாங்குநேரி சம்பவம் நாட்டின் இதயத்தில் விழுந்த வெட்டு. சாதியைக் கூட மன்னிக்கலாம். அதற்கு இழிவு பெருமை கற்பித்தவனை மன்னிக்க முடியாது. சமூக நலம் பேணும் சமூகத் தலைவர்களே! முன்னவர் பட்ட பாடுகளைப் பின்னவர்க்குச் சொல்லிக் கொடுங்கள் அல்லது மதம் மாறுவதுபோல் சாதி மாறும் உரிமையைச் சட்டமாக்குங்கள்”என்று கூறியிருக்கின்றார்.

Advertisement