நீண்ட இடைவேளைக்கு பின் ஹீரோவானார் வடிவேலு.! வெளியானது அதிகாரபூர்வ பர்ஸ்ட் லுக்.!

0
952
- Advertisement -

நடிகர் ராஜ்கிரனால் அறிமுகம் செய்யப்பட்டு தமிழ் சினிமாவில் கவுண்டமணி செந்திலுக்கு பிறகு ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டவர் காமெடி நடிகர் வைகைபுயல் வடிவேலு அவர்கள்.காமெடியில் தனக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தை வைத்திருக்கும் இந்த இம்சை அரசனுக்கு மேலும் ஒரு இம்சை வந்தது. 

-விளம்பரம்-

தமிழில் சிம்புதேவன் இயக்கி 2006 ல் வெளிவந்த படம் 23 ஆம் புலிகேசி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.இந்நிலையில் மீண்டும் வடிவேலுவை வைத்து 24 ஆம் புலிகேசி இயக்கவிருந்தது. 23 ஆம் புலிகேசியை தயாரித்த ஷங்கர் தான் இந்த படத்தினையும் தயாரிக்க இருந்தார். 

- Advertisement -

இந்த நிலையில் வடிவேலு இப்படத்தில் தான் நடிக்கமாட்டேன் என கூறி திடீரென இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். இதனால் படத்தை முடித்து தரும்படியும் இல்லையேல் வடிவேலுவால் 9 கோடி ருபாய் நஷ்டத் தொகை தரும்படியும் பட குழுவினர் புகார் அளித்தனர்.இதையடுத்து தயாரிப்பாளர்கள் சங்கம் வடிவேலுவிற்கு தமிழ் படங்களில் நடிக்க தடை விதித்தது.

இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் ஹீரோவாக களமிறங்குகிறார் வடிவேலு. இயக்குனர் சக்தி சிதம்பரம் புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். ‘பேய் மாமா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. வடிவேலு ஏற்கனவே சக்தி சிதம்பரம் இயக்கிய பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement