வம்சம் சீரியல் நடிகை தீடிர் தற்கொலை.! வெளிவந்த காரணம்.! புகைப்படம் இதோ

0
919

கடந்த சில ஆண்டுகளாக சீரியல் நடிகர்களின் தற்கொலை சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் பிரபல சீரியல் நடிகை பரியங்கா தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் சின்னத்திரை நடிகர்களிடயே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

priyanka actress

மலையாள நடிகையான இவர் , முதலில் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான “வம்சம் ” தொடரில் ஜோதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கேரளாவை சேர்ந்த இவர் சென்னை வலசரைவாக்கத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தகவல் அறிந்து விரைந்த வலசரைவாக்கம் காவல் துறையினர் ப்ரியங்காவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும், 32 வயதாகும் ப்ரியங்காவிற்கு திருமணமாகி நீண்ட வருடங்களாக குழந்தை இல்லமால் இருந்ததால் ப்ரியங்காவிற்கும் அவரது கணவர் முனீர் என்பவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளதாக கூறப்படுகிறது.

actress priyanka

இதனால் குடும்ப பிரச்சனை காரணமாக நடிகை பிரியங்கா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இவரது தற்கொலை குறித்து மனநல நிபுணர் தெரிவிக்கையில் தொலைக்காட்சியில் வேலை செய்யும் பல நடிகர் நடிகைகளுக்கு மன அழுத்தம் நிறைய இருக்கிறது. அதன் காரணமாக தான் தற்கொலைகள் அதிகமாகி வருகின்றது என்று தெரிவித்துள்ளனர்.