வம்சம் சீரியல் ப்ரியங்கா கடைசியாக அம்மவிடம் சொன்ன வார்த்தை இதுதான்.!

0
788
vamsam-serial-priyanka

கடந்த சில ஆண்டுகளாக சீரியல் நடிகர்களின் தற்கொலை சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் பிரபல சீரியல் நடிகை பரியங்கா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . இந்நிலையில் சமீபத்தில் ப்ரியங்காவின் தாய், ப்ரியங்கா இறப்பதற்கு முன்னதாக கூறிய கடைசி விடயத்தை பற்றி உருக்கமுடன் கூறியுள்ளார்.

Vamsam-Tamil-TV-Serial-Actress-Priyanka

மலையாள நடிகையான நடிகை பிரியங்கா, முதலில் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான “வம்சம் ” தொடரில் ஜோதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கேரளாவை சேர்ந்த இவர் சென்னை வலசரைவாக்கத்தில் வசித்து வந்தார்.இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் அவரது சொந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

32 வயதாகும் ப்ரியங்காவிற்கு திருமணமாகி நீண்ட வருடங்களாக குழந்தை இல்லமால் இருந்ததால் ப்ரியங்காவிற்கும் அவரது கணவர் முனீர் என்பவருக்கும் அடிக்கடி சண்டை வந்தது தான் இந்த தற்கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதனால், அவர் சில வருடங்களாக தனது கணவரை பிரிந்து தான் வாழ்ந்து வந்தார்.

Priyanka

இந்நிலையில் , நடிகை ப்ரியங்காவின் தாய் அவரது உடலை பார்த்து அழுது கொண்டிருந்த போது” நான் வெச்சிருக்க Beauty parlour விரிவாக்கம் செய்ய போறேன் , நீ பால் காச்சற நிகழ்ச்சிக்கு வந்துடக்குனு சொன்னா. அவ தற்கொலை செஞ்சிக்கிற மனநிலையில இல்ல.” என்று அனைவரிடமும் கூறி கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.