வாணி போஜனுக்கு அடித்த அடுத்த லக்..எங்கியோ மச்சம் இருக்குப்பா இவங்களுக்கு..

0
5193
vani-bhojan
- Advertisement -

இன்றைய தமிழ் சினிமாவில் நடித்து வரும் பல நடிகைகள் எல்லாம் தொலைக்காட்சி தொடர்களில் இருந்தும்,விளம்பரங்களில் இருந்தும் தான் வந்தவர்கள். அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைக்கிறார் நம்ம வாணி போஜன்.சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் சூப்பர் ஹிட் கொடுத்த சீரியல்களில் “தெய்வமகள்” சீரியலும் ஒன்று. இந்த சீரியலை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து மகிழ்ந்து வந்தார்கள் என்று கூட சொல்லலாம். இந்த சீரியலில் “சத்யா” என்ற கதாபாத்திரத்தில் வாணி போஜன் நடித்து வந்தார். அதிலும், சத்யா என்பதைவிட தாசில்தார் என்று தான் அவரை அதிகம் அழைப்பார்கள்.

-விளம்பரம்-
Image

நடிகை வாணி போஜன் நீலகிரி மாவட்டத்தை சார்ந்தவர். இவர் முதலில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ்யில் தான் பணிபுரிந்தார். அதனைத் தொடர்ந்து வடிவமைப்பு விளம்பர வேலைகளையும் செய்து வந்துள்ளார். அதன் மூலமாகத்தான் சின்னத்திரையில் உள்ள தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார்.மேலும்,நடிகை வாணி போஜன் முதலில் மாயா என்ற தொடரின் மூலம் தான் சின்னத்திரையில் அறிமுகமானார். அதன் பிறகு தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு போன்ற பல தொடர்களில் நடித்து உள்ளார். தெய்வமகள் சீரியல் மூலம் வாணி போஜனுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூட சொல்லலாம் .அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். மேலும், வாணி போஜன் தெய்வமகள் சீரியலுக்கு பிறகு எந்த ஒரு சீரியலிலும் நடிக்க வில்லை. இதனால் பல ரசிகர்கள் ஏன்? சீரியலுக்கு வரவில்லை ஏன்? நடிக்கவில்லை என பல கேள்விகளை இணையங்களில் எழுப்பி வந்தனர்.

- Advertisement -

இதனைத்தொடர்ந்து வாணி போஜன் அவர்கள் சினிமா திரையில் நடிக்க போகிறார் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் வெளிவந்துள்ளது. இதனால் வாணி போஜன் ரசிகர்கள் பயங்கர குஷியில் இருப்பதாக தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் சிவகார்த்திகேயன், பிரியா பவானி போல் வாணி போஜனும் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு செல்கிறார். இதனைத்தொடர்ந்து நடிகை வாணி போஜன் அவர்கள் நடிகர் வைபவுக்கு ஜோடியாக ‘என்4’ என்ற படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. இந்த படத்தை நிதின் சத்தியா தயாரிக்க உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதற்கு முன்னர் சின்னத்திரையிலிருந்து வந்த ப்ரியா பவானியும் முதன்முதலாக வைபவுக்கு ஜோடியாக ‘ மேயாதமான்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பென்ச் தயாரிக்கும் ஒரு வெப் சீரிஸில் இவர் நடிக்கவுள்ளாராம். இந்த வெப் சீரிஸ் Rom-Com-ஆக இருக்கும் என கூறப்படுகின்றது, மேலும், இதில் பரத் நடிக்கவிருப்பதாகவும் கூறுகின்றனர்.

Image

இதனைத்தொடர்ந்து பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவர் கொண்டா தயாரிக்கும் முதல் படத்தில் கதாநாயகியாக நடிக்க வாணிபோஜன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விஜய் தேவர் கொண்டா நடித்து சூப்பர் ஹிட்டான ‘பெல்லி சூப்புடு’ என்ற படத்தை இயக்கிய தருண் பாஸ்கர் தான் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். மேலும், இந்த படத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த குறும் பட இயக்குனர் சமீர் இயக்க உள்ளார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. இதனை தொடர்ந்து தெலுங்கு படத்தில் நடித்தது குறித்து வாணி போஜன் இடம் கேட்டபோது அவர் கூறியது, தனக்கு தெலுங்கு மொழி சரளமாக பேச தெரியாது. ஆனால், அவர்கள் பேசுவதை ஓரளவு புரிந்து கொள்வேன்.

-விளம்பரம்-

இருந்தாலும் படக்குழுவில் உள்ள அனைவரும் தமிழில் பேசுவதால் எனக்கு அந்த அளவுக்கு கஷ்டம் இல்லை. மேலும், அவர்கள் தரும் வசனத்தை மனப்பாடம் செய்து ஒன்றுக்கு இரண்டு முறை ரிகர்சல் செய்து கொள்வேன். பின்னர் படக்குழுவில் உள்ள ஒரு சில பேரு எனக்கு நல்ல ஒத்துழைப்பும் தருவதால் என்னால் தெலுங்கு படத்தில் நடிக்க எளிதாக இருக்கிறது. மேலும், தெலுங்கு மொழியைக் கற்றுக்கொண்டு வருகிறேன் என்று கூறினார். இனிமேல் நம்ம வாணி போஜன் அவர்களை வெள்ளித்திரையில் தான் பார்க்க முடியும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Advertisement