எங்கள் குடும்பத்திக்கு என்ன சாபக்கேடோ தெரியவில்லை- 36 வயதில் மரணமடைந்த வாணிஸ்ரீ மகன்.

0
10868
vanisri
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் வாணிஸ்ரீ. இவர் தமிழ் மொழி மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம்,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் 1970 ஆண்டுகளில் சினிமா துறையில் கொடிகட்டி பறந்தவர். இவர் உயர்ந்த மனிதன், வசந்த மாளிகை, கண்ணன் என் காதலன், ஊருக்கு உழைப்பவன், புண்ணிய பூமி, நல்லதொரு குடும்பம் என பல படங்களில் நடித்து உள்ளார். மேலும், இவர் தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

பிறகு இவர் 1980 ஆம் ஆண்டு டாக்டா்.கருணாகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் சிறிது காலம் விலகி இருந்தாா். இவருக்கு இரு மகன் மற்றும் இரு மகள் உள்ளனர்.இந்நிலையில் நடிகை வாணிஸ்ரீயின் மகன் அபிநய வெங்கடேஷ் சமீபத்தில் இறந்து விட்டார். பெங்களுரூ மருத்துவக்கல்லூரியில் மருத்துவ துணை பேராசியராக பணியாற்றி வந்த இவர் தனது 36 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார் என்று தகவல்கள் வெளியானது.

- Advertisement -

ஆனால், சொத்து பிரச்சனை காரணமாக இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது. தனது மகனின் இழப்பு குறித்து சமீபத்தில் பேட்டி அளித்துள்ள அபிநய வெங்கடேஷ்ஷின் தந்தை கருணாகரன் கூறியுள்ளதாவது. அபினய்க்கு ஸ்போர்ட்ஸ்ல குறிப்பா கிரிக்கெட்ல விருப்பம் அதிகம். மருத்துவ படிப்பை தேர்ந்தெடுத்து படித்த போது கூட ஸ்போர்ட்ஸ் மெடிசின்தான் எடுத்துப் படித்தான்.

இணையத்தில் அபிநய வெங்கடேஷ் தற்கொலை செய்து கொண்டதாக பரவும் புகைப்படம்

எங்கள் குடும்பத்திக்கு என்ன சாபக்கேடோ தெரியவில்லை. எனக்கு ஐந்து வயசா இருந்த போது என்னுடைய அப்பா ஹார்ட் அட்டாக்லஇறந்து விட்டார் . என்னுடைய அண்ணன் ஒருத்தரும் 40 வயசுல மாரடைப்பால இறந்தார். இப்ப என் ஒரே மகனும் அதே ஹார்ட் அட்டாக்ல போயிட்டான். என்ன சொல்றதுன்னே தெரியவில்லை என்று மிகவும் கண் கலங்கி கூறியுள்ளார்

-விளம்பரம்-
Advertisement