அட, அடிக்கடி பார்த்த இந்த எண்ணெய் விளம்பரத்தில் நடிச்சது இந்த பிக் பாஸ் 3 நடிகையா? இது தெரியுமா உங்களுக்கு.

0
2617
abhirami

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை அபிராமி. இவர் ஆரம்பத்தில் மாடல், விளம்பரங்களில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பரிச்சயமானார். இவர் களவு என்ற படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நடிகை அபிராமி சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அபிராமி அவர்களுக்கு நடிப்பில் மட்டும் இல்லாமல் பரத நாட்டியத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றவர். அதோடு அபிராமி மிஸ் தமிழ்நாடு பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்படத்தக்கது.

மேலும், கடந்த ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளிவந்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த நேர்கொண்ட பார்வை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அபிராமி நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். நேர்கொண்ட பார்வை படத்தை வினோத் அவர்கள் இயக்கியிருந்தார். இந்த படம் திரைக்கு வெளிவருவதற்கு முன்பே நடிகை அபிராமி அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமானார்.

இதையும் பாருங்க : நீங்க எல்லாம் எதுக்கு புள்ள பெத்தீங்கனு கேட்டார். மகளுக்கு டாக்டர் சீட்டு வாங்கி கொடுத்த கேப்டன் – தனுஷ் தந்தை சொன்ன விஷயம்

- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் அபிராமி அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அபிராமியின் காதல்களும், சண்டைகளும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்தது. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில் நடிகை அபிராமி அவர்கள் நடித்த விளம்பர வீடியோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே நடிகை அபிராமி அவர்கள் நிறைய விளம்பரங்களில் நடித்துள்ளார். இவர் Fortune Oil என்ற விளம்பரத்தில் நடித்துள்ளார். தற்போது அந்த விளம்பரத்தின் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள். நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு நடிகை அபிராமி அவர்கள் நடிகர் சூர்யா நடிக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அந்த படத்தை கௌதம் மேனன் இயக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement