ராபர்ட் மாஸ்டர் குறித்து வனிதா கூறி இருக்கும் கருத்து தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி ஐந்து நாட்கள் ஆகி விட்டது. இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து, அசீம், அசல் கொலார், ராபர்ட், ஷெரினா, ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம் போல் கமல் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். இந்த முறையும் பலர் புது முகங்களாக இருக்கின்றனர். மேலும், நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே போட்டியாளர்களுக்குள் டாஸ்க் கொடுக்கப்பட்டது. முதல் நாளிலேயே பிக் பாஸ் கொடுத்த டாஸ்கில் நான்கு பேர் இந்த வார நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள்.
பிக் பாஸ் சீசன் 6:
இப்படி ஆரம்பமே அமர்க்களமாக ஆரம்பித்ததால் போட்டியாளர்கள் மத்தியில் முதல் நாளே சர்ச்சை தொடங்கியது. அதுமட்டும் இல்லாமல் இந்த முறை கேப்டன் தேர்வும் நடைபெறவில்லை. வீட்டில் உள்ள போட்டியாளர்களை நான்கு அணிகளாக பிரித்து வேலைகள் பிரித்து செய்து வருகின்றனர். இதனால் போட்டியாளர்களுக்குள் சலசலப்பு தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் ராபர்ட் மாஸ்டரை குறித்து வனிதா பேசியிருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ராபர்ட் மாஸ்டர்:
தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடன இயக்குனர் ராபர்ட். இன்னும் சொல்லப்போனால், இவர் வத்திக்குச்சி வனிதாவின் முன்னாள் கணவர் ஆவார். ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதா பங்கேற்று இருந்தார். தற்போது வனிதாவின் முன்னாள் கணவர் ராபர்ட் பிக் பாஸ் 6ல் பங்கேற்று இருக்கிறார். மேலும், நிகழ்ச்சியில் ராபர்ட் மாஸ்டர் நன்றாக விளையாடி வருகிறார். சில டாஸ்குகளில் இவர் வெற்றியும் பெற்று இருக்கிறார்.
ரக்ஷிதாவிடம் ராபர்ட் மாஸ்டர் சொன்னது:
இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் கொடுத்த டாஸ்கில் ராபர்ட் மாஸ்டர் – ரக்ஷிதா இருவரும் எதிர் எதிரே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ராபர்ட் மாஸ்டர், எனக்கு பெண் நண்பர்கள் இல்லை. உங்களை முதலில் சீரியல் தான் பார்த்தேன். எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். இங்கிருந்து வெளியே சென்ற பின்னும் உங்களுடன் நட்பில் இருக்க நினைக்கிறேன் என்று கூறியிருந்தார். ராபர்ட் மாஸ்டர் என்ன சொல்ல நினைக்கிறார் என்பதை புரிந்து கொண்ட ரக்ஷிதா, இங்கு வந்து இரண்டு நாட்கள் தான் ஆகிறது.
வனிதா அளித்த பேட்டி:
அதற்குள்ளே ஏன் இப்படி என்று கூறி இருந்தார்? இதன் மூலம் ராபர்ட் மாஸ்டர் ரக்ஷிதாவுக்கு ரூட் விடுவது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இந்நிலையில் ராபர்ட் மாஸ்டர் பேசியதை குறித்து வனிதாவிடம் கேட்டதற்கு அவர், அவன் என்ன எனக்கு புருஷனா? பாய் பிரண்டா? ஏதோ பப்ளிசிட்டிக்காக அவன் பெயரை பயன்படுத்தினேன். அவன் ஏற்கனவே கல்யாணம் ஆகி குழந்தைகள் எல்லாம் இருக்கிறது. அவனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது. இப்போது அவன் சிங்கிள் என்று சொல்லி இமேஜை மெயின்டைன் பண்ணி கொண்டு வருகிறான் என்று கூறியிருக்கிறார்.